Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்.....
சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!
ஹெலங்கெடி பகுதி கடலில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா சென்றவர் பலியானார்.
கோவா அருகே ஹெலங்கெடி பகுதி கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 21 பேரும் கடலில் விழுந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து, கடலில் விழுந்த 21 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், கடலில் விழுந்த சுற்றுலா பயணிகளில் 54 வயதான ஒருவர் மட்டும் பாதுகாப்பு உடை அணியாததால் கடலில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க:2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!