செய்திகள் :

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தது தவறு: அஜய் மாக்கன்

post image

நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.

தில்லியில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் புதன்கிழமை வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பின்னர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ஜன் லோக்பால் போராட்டத்தின் மூலம் தில்லியில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஊழல் எதிர்ப்பு குறைதீர் ஆணையமான ஜன்லோக்பாலை அமைக்க அக்கட்சி தவறிவிட்டது.

நாடு முழுவதும் யாரேனும் மோசடி மன்னன் ஒருவர் இருந்தால் அது கேஜரிவால் தான். அதனால்தான் கேஜரிவால் அரசு மீதும், மத்திய பாஜக அரசு மீதும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம். பஞ்சாபில் கூட ஜன்லோக்பால் ஏன் அமைக்கப்படவில்லை. தில்லியில் துணைநிலை ஆளுநர் உங்களை ஜன் லோக்பால் கொண்டு வர அனுமதிக்கவில்லை என்றால், அதை பஞ்சாபில் அமைக்க வேண்டியதுதானே?

ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் லோக்பால் கொண்டு வருவதாகக் கூறி உருவாக்கப்பட்டது. இப்போது அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். தில்லியை லண்டனைப் போல் ஆக்குவோம் என்றும் கூறினர். தற்போது தேசிய தலைநகரை மாசுபடுத்துவதில் முதலிடமாக உருவாக்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறு. அதை சரிசெய்ய வேண்டும், மேலும் அது எனது தனிப்பட்ட கருத்து.

தில்லியின் அவல நிலைக்கும், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததற்கும் 2013-இல் 40 நாட்கள் நீடித்த ஆம் ஆத்மி அரசை நாங்கள் ஆதரித்ததுதான் என்பதை நான் இன்று உணர்கிறேன். மேலும், தில்லியில் முன்பு கூட்டணி அமைத்ததன் மூலம் மீண்டும் ஒரு தவறு நடந்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன், அதை சரிசெய்ய வேண்டும் என்றார் மாக்கன்.

பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீச்சு!

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, ​​முன்னாள் அமைச்... மேலும் பார்க்க

தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள்!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழக... மேலும் பார்க்க

தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசத... மேலும் பார்க்க

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு!

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையடுத்து கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ‘ஞா... மேலும் பார்க்க

2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!

2023 - 24ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக ரூ. 2,244 கோடி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.காங்கிரஸ... மேலும் பார்க்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், தொலைத... மேலும் பார்க்க