செய்திகள் :

``மீண்டும் சுனாமி வந்தால் தப்பிக்க வழி இல்லை..'' - ஏவிஎம் கால்வாய் பற்றி கவலைப்படும் பாதிரியார்

post image

2004-ல் உலகை தாக்கிய சுனாமி தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம், கன்னியாகுமரி-யிலும் அதிக உயிர்களை பறித்துச்சென்றது. சுனாமி உயிர்களை சுருட்டிச்சென்று இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்துக்கும், மக்களுக்கும் அரணாக இருக்கும் ஏ.வி.எம் கால்வாயை பாழ்படுத்தியதே அதிக மரணத்துக்கு காரணம் என்கிறார் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில்.

இதுபற்றி சர்ச்சில் நம்மிடம் கூறுகையில், "ஏ.வி.எம் கால்வாய் மூன்றாவது தேசிய நீர்வழி பாதையாகும். கேரளாவின் கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு வரை நீண்டுகிடக்கிறது. பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளச்சல், கொட்டில்பாடு பகுதியில் நீர் ஓட்டம் இல்லாமல் புதர்மண்டிக்கிடக்கிறது. 

பாதிரியார் சர்ச்சில்

சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 1147 பேரை காவுகொண்டது. அதில் கொட்டில்பாடு என்ற சிறிய கிராமத்திலேயே 199 பேர் இறந்தனர். அதற்கு காரணம் இருக்கிறது. சுனாமி வந்ததும் மக்கள் கரையை நோக்கி ஓடத்தொடங்கினர். ஓடும் சமயத்தில் குறுக்கே ஏ.வி.எம் கால்வாய் வந்தது. அந்த கால்வாயில் பலரும் தள்ளப்பட்டனர். கால்வாயில் சேறும் சகதியுமாக இருந்ததால் புதைக்குழியில் சிக்கி அவர்களால் மீள முடியவில்லை. அதிகமான உடல்களை ஏ.வி.எம் கால்வாயில் இருந்துதான் மீட்டெடுத்தோம்.

20 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கால்வாய் துர்வாரப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. ஒருவேளை இன்னும் ஒரு பேரிடர் கடலிலில் இருந்து வந்தால், தூர்வாரப்படாத கால்வாயால் மக்கள் பலியாகும் நிலை ஏற்படும். எனவே, உயிர்பலியைத் தடுக்கும் விதமாக ஏ.வி.எம் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

இதுபோன்ற பேரிடர்கள் வந்தால் மக்களை எச்சரிக்கும் மையங்கள் இல்லை. சில பகுதிகளில் உள்ள எச்சரிக்கை மையங்களும் முறையாக செயல்படவில்லை. பேரிடர் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காக எந்த இடமும் ஏற்படுத்தப்படவில்லை.

சாக்கடை போன்று காட்சியளிக்கும் ஏ.வி.எம் கால்வாய்

சுனாமி தாக்கிய பிறகு நான் கொட்டில்பாடு பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்ததால் கால்வாயால் ஏற்பட்ட நிலை குறித்து அறிந்துகொண்டேன். அப்போது, குளச்சல் பகுதியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளையும், மண்டபங்களையும் திறந்து மீனவ மக்கள் தங்குவதற்காக கொடுத்த நிகழ்வை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இப்போதும் கடற்கரையில் நெருக்கடியாக மக்கள் வசிக்கிறார்கள். ஆபத்து காலங்களில் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற எந்த வழிமுறையும் செய்யவில்லை. கடலில் இருந்து ஏற்படும் பேரிடர்களில் இருந்து மக்கள் தப்பிக்க முறையான வழிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

Los Angeles fires: `சாம்பலாகும் கனவுகளின் நகரம்; தடுமாறும் அமெரிக்கா’ - பேரழிவை காட்டும் காட்டுத்தீ

Los Angeles firesஅமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான காலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கு பக்கம் உள்ள பாலிசேட்ஸ் மற்றும் கிழக்கு பக்க... மேலும் பார்க்க

`யே, பெரியாயோ... இது உன் புள்ளையானு பாரு' - குலைநடுங்க வைத்த குரல் | சுனாமி சுவடுகள் | Tsunami 20

``ஃபோட்டோ ஏதும் எடுத்தா ஆயுசு குறச்சிடுமே'ன்னு போட்டோ எடுக்காம விட்டுட்டேனே"இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அகிலமே அரண்டு பார்த்த ஆழிப்பேரலையின் இருபதாவது ஆண்டை ஒட்டி அதன் நினைவிடங்களுக்கு ந... மேலும் பார்க்க

Tsunami 20 : `கடல் பறித்துச்சென்ற 4 குழந்தைகளையும் மீண்டும் பெற்றுக்கொள்ள...' - ராஜ், ஆக்னஸ் தம்பதி

சுனாமி எனும் பேரிடர்2004 டிசம்பர் 26-ம் தேதியை கறுப்பு ஞாயிறாக மாற்றியது சுனாமி என்னும் ஆழிப்பேரலை. இந்தோனேசியா பக்கத்தில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்... மேலும் பார்க்க

Wayanad: விதிகளை மீறிக் கட்டப்பட்ட 15 ரிசார்டுகள்; ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு; பின்னணி என்ன?

வயநாடு நிலச்சரிவு பேரிடர் துயர் ஏற்பட்டு 4 மாதங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுவாழ்வு முழுமையாகக் கிடைக்கவில்லை.இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கொட்டித் தீர்த்த கனமழை... தெருக்களில் மழைநீர் வடியாததால் அவதிப்படும் மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் குளம் போலத் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் பல சாலைகள், பால... மேலும் பார்க்க

Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo Album

நெல்லை கனமழை வெள்ளம்: நெல்லை சந்திப்பு அன்றும்-இன்றும் காட்சிகள்.! மேலும் பார்க்க