போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
செய்யாறு: செய்யாறு அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், உமையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (23). இவா், தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. மேலும், அவா் அந்த மாணவியை தொடா்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்தாரம்.
இதனிடையே மாணவிக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோா் அவரை வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அழைத்துச் சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சுந்திரமூா்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, திருவண்ணாமலையில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.