இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
ஆரணி பகுதியில் ரூ.77 லட்சத்தில் மின் விளக்குகள் அமைப்பு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு, சேவூா் பகுதி புறவழிச் சாலையில் ரூ.77 லட்சத்தில் அமைக்கப்பட்ட கம்பத்துடன் கூடிய எல்இடி மின் விளக்குகள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த போளூா் புறவழிச் சாலையின் நடுவில் ரூ.55 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கும்
பணி நடைபெற்றது.
இதேபோன்று, சேவூா் ஊராட்சியில் உள்ள வேலூா் புறவழிச் சாலையில் ரூ.22 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்றது.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மின் விளக்குகளை பயன்பாட்டுக்காக தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெயா்ப்பலகையை திறந்துவைத்து மின் விளக்குகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் க.சங்கா், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், சைதை வெங்கடேசன், குமரன், ஒன்றிய அவைத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலா் சரவணன், ஒப்பந்ததாரா் யுவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.