லாஸ் ஏஞ்சலீஸ்: ‘பிங்க் பொடி’ தூவி காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி!
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பிங்க் பொடி தூவி தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ரோஜா வண்ணத்தில் உள்ள இந்த வேதியியல் கலவையானது, பொருள்கள் மீது தூவப்படுவதால் அந்த பொருள்களில் தீப்பற்ற நேர்ந்தால் அப்போது இந்த பிங்க் பொடி காற்றிலிருக்கும் ஆக்ஸிஜன் வாயுவை வேதியியல் மாற்றத்தால் தடுத்துவிடுவதால் தீப்பற்ற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சலீஸில் பிங்க் பொடி தூவப்பட்டு வருகிறது.