இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
அதானி பங்குகள் உயர்வு! டிரம்ப்தான் காரணமா?
அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கௌதம் அதானியின் லார்ஜ் கேப் வகையைச் சேர்ந்த அதானி பவர் நிறுவனத்தின் பங்கு செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 20 சதவிகிதம் உயர்ந்தது. இதன்மூலம், அதன் பங்குதாரர்களுக்கு லாபமும் கிடைத்துள்ளது. அதானி பவர் மட்டுமின்றி, அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகள் அனைத்தும், செவ்வாய்க்கிழமை பெரும் லாபத்தில் வர்த்தகமாகியது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் கலையப்பட்டால் (தகுதியற்றவையாகக் கருதப்பட்டால்), அதானிக்கு எதிரான 265 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கும் திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக பிரபல இந்திய - அமெரிக்க வழக்குரைஞர் ரவி பத்ரா தெரிவித்தார்.
இதையும் படிக்க:பொய்கூறி விடுப்பு எடுப்பவர்களைக் கண்காணிக்கும் துப்பறிவாளர்கள்!
அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில், 20 சதவிகிதம் உயர்ந்து ரூ. 539.85-ஆக முடிந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பங்கு விலை சுமார் 7 சதவிகிதமும், கடந்த மாதத்தில் சுமார் 2 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.