செய்திகள் :

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள்: ராகுல் காந்தி!

post image

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராணுவ நாள் வாழ்த்துகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி சுமார் 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு ராணுவத்தின் கட்டுப்பாடுகள் இந்தியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. அதன் நினைவாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி ராணுவ நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 76-வது ராணுவ நாளை இந்தியா கொண்டாடுகிறது. 

இதுபற்றி ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய எல்லைகளை இரவும் பகலும் தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் பாதுகாக்கும் தைரியமிக்க ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நாள் வாழ்த்துகள்.

ஒவ்வொரு இந்தியரும் உங்கள் அசாத்திய துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் வணக்கம். வாழ்க இந்தியா!” எனப் பதிவிட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா?

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.சாம்பியன்ஸ்டிராபி வருகிற பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இ... மேலும் பார்க்க

கிளாட்-2025 தேர்வு: வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிசீலனை!

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஏதேனும் ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது! -பிரதமர் மோடி

திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்க் கலாசாரத்தில் மிகவும் முன்னோடி புலவரும், உலகப் பொதுமறையான திருக்குறள் தந்தவரு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி ரூ.25 ஆயிரமாக அதிகரிப்பு

இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 5 ஆயிரம் ஆக இருந்த பரிசுத்தொகை தற்போது 5 மடங்கு உயர்த்தி ரூ. 25 ... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 3 போர்க்கப்பல்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீல்கிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர்க்கப்பல்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.இந்த மூன்று போர்க் கப்பல்களும் நாட்டின் ... மேலும் பார்க்க

1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ராகுல் பதிலடி!

இந்தியா 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தில்லியில் தீன் தயாள் உபாத்யா சாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்... மேலும் பார்க்க