முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா?
சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி வருகிற பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இதன்மூலம் 1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அணி ஐசிசி போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய அணி மறுத்ததால், இந்தியாவுக்கானப் போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் விளையாடுகிறது.
7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஞ்சி டிராபியில் ரிஷப் பந்த்!
இருப்பினும், தொடக்க விழாவில் பங்கேற்கும் மெகா நிகழ்வுக்கு முன்னதாக ரோஹித் சர்மா தனது வாழ்க்கையில் முதல் முறையாக பாகிஸ்தானுக்குச் செல்லவிருப்பதாக பிசிசிஐயின் நம்பத் தகுந்த வட்டாங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான ரோஹித் சர்மா இதுவரை பாகிஸ்தானுக்கு பயணம் செய்ததில்லை.
ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்வாரா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிக்கப்பட்ட பிறகுதான் அவர்கள் இந்த விஷயம் குறித்து தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவிற்கு ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 16 அல்லது 17 ஆம் தேதியன்று நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து அணிகளின் கேப்டன்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.