செய்திகள் :

கார் பார்க்கிங் தகராறு; செக்யூரிட்டி மீது துப்பாக்கிச் சூடு.. போதை ஆசாமி கைது!

post image

டெல்லி மற்றும் நொய்டாவில் அடிக்கடி வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக அல்லது லிப்டில் ஏறுவது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் செக்யூரிட்டி கார்டுகளை தாக்குவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் இருக்கும் ராதா ஸ்கை கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசிப்பவர் கெளரவ் சிசோடியா. இவர் சொந்தமாக பப் நடத்தி வருகிறார். இவர் வசிக்கும் கட்டிடத்தில் கடந்த சில நாள்களாக பார்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக குடியிருப்புவாசிகள் இடையே தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று முன் தினம் குடியிருப்புவாசிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

அன்று இரவு கெளரவ் சிசோடியா தனது பப்பில் நன்றாக மது அருந்திவிட்டு காரில் வீட்டிற்கு வந்தார். அவர் காரை நிறுத்துவது தொடர்பாக செக்யூரிட்டி கார்டுகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, `துணிச்சல் இருந்தால் என்னை அடி பார்க்கலாம்' என்று சிசோடியா செக்யூரிட்டி கார்டுகளிடம் கூறினார். அதற்கு, `நாங்கள் ஏன் உங்களை அடிக்கவேண்டும், நீங்கள்தான் ஏழை செக்யூரிட்டி கார்டுகளை துன்புறுத்துகிறீர்கள்' என்று செக்யூரிட்டி கார்டுகள் தெரிவித்தனர்.

உடனே, 'நான் ஏழைகளை துன்புறுத்துகிறேனா?' என்று கேட்ட சிசோடியா, `வா வந்து என்னை ஒரு முறை தொட்டுப்பார்' என்று அதட்டினார். செக்யூரிட்டி கார்டுகளை சிசோடியா அடிக்க முயன்றார். உடனே, அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

செக்யூரிட்டி கார்டுகளை பார்த்து, `நீங்கள் பெண்களை மானபங்கம் செய்திருக்கிறீர்கள், அதனால், உங்களை சுடுகிறேன்' என்றவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். அவர் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக இதில் செக்யூரிட்டி கார்டுகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசோடியாவை கைது செய்தனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு வரை அக்கட்டிட வளாகத்தில் இருந்தவர்கள் உறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... வடமாநில இளைஞர் கைது

சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் திடீரென மாண... மேலும் பார்க்க

`காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு' - போலீஸார் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை

பெற்றோர்கள் பெரும்பாலும் காதலை விரும்புவதில்லை. ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்களது பிள்ளைகள் விரும்பும் நபர்களையே திருமணம் செய்து வைக்கின்றனர். மத்திய பிரதேச மாநில குவாலியர் என்ற இடத்தில் தங்களது விருப்... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி மறைத்த நிர்வாகம்?

புதுச்சேரியில் அத்துமீறல் சம்பவம்சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமி... மேலும் பார்க்க

``மிளகாய் பொடியை தூவி தங்க செயினை திருட முயற்சி'' -தலைமுடியை பிடித்து அடித்து விரட்டிய மூதாட்டி!

மும்பையில் மூதாட்டி ஒருவர் திருட வந்தபெண்ணுடன் போராடி தங்க செயினை தக்கவைத்துக்கொண்டார். மும்பை மலாடு மேற்கு பகுதியில் வசிப்பவர் ஆயிஷா ஷேக்(91). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது பர்தா அணிந்த... மேலும் பார்க்க

எறும்பு திண்ணி கடத்தல்; திரைப்பட பாணியில் களமிறங்கிய காவல்துறை... கூண்டோடு கைது செய்யப்பட்ட கும்பல்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம் அடுத்த ஒடுகத்தூர் பகுதியில் எறும்பு தின்னியை ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட வனத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து ஒட... மேலும் பார்க்க

மதுரை: பாஜக மாநில நிர்வாகியை போக்சோ வழக்கில் கைதுசெய்த போலீஸ்! - என்ன நடந்தது?

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.போக்சோ வழக்குபாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவரான எம்.எஸ்.ஷா, மதுரை த... மேலும் பார்க்க