ஒரே நேரத்தில் 3 போர்க்கப்பல்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீல்கிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர்க்கப்பல்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
இந்த மூன்று போர்க் கப்பல்களும் நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டிருப்பது, நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியிலும், கடற்படை பாதுகாப்பிலும் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரே நேரத்தில், ஒரு தாக்கி அழிக்கும் திறன்கொண்ட போர்க் கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போன்றவை ஒன்றாக கப்பற்படையில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை. இதில் மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூன்றுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசினார்.