பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு! 14 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!
மகாராஷ்டிரம்: வங்கதேசப் பெண்கள் 3 பேர் கைது!
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வாழ்ந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாணேவின் உல்ஹாஸ் நகர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோலீகியான் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது சட்டப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வங்கதேசத்து பெண்கள் மூன்று பேர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரோசினா பேகம் சுகுர் அலி (வயது 29), தன்சீலா காத்தூன் ரசாக் ஷேக் (22) மற்றும் ஷேபாலி பேகம் முனிருல் ஷேக் (23) ஆகிய மூன்று வங்கதேசத்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க:2024-ல் சொகுசு வீடுகளின் விற்பனை 53% அதிகரிப்பு!
அவர்கள் மூவரின் மீதும் மனப்பாடா காவல் நிலையத்தில் சட்டவிரோதமான இந்திய நாட்டில் குடியேறியதாக முன் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்திலிருந்து பிழைப்புத் தேடி இந்தியாவிற்குள் நுழைந்த அவர்கள் மூன்று பேரும் வீட்டு வேலைகள் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.