செய்திகள் :

``தினை பொங்கல், ஆண்கள் மட்டுமே விரதமிருந்து சமைப்போம்.." -ஊட்டி பழங்குடியின் பாரம்பர்ய பொங்கல்!

post image

சாமை தினை பொங்கல்

பழங்குடிகளின் தாய் நிலமான நீலகிரியில் பனியர், காட்டு நாயக்கர், குறும்பர் உள்ளிட்ட 6 வகையான பண்டைய பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடுமையான குளிர் நிறைந்த மலை மேலிடம், மிதமான காலநிலையைக் கொண்டிருக்கும் நீலகிரி மலைச்சரிவு, மலையடிவாரம் என ஒவ்வொரு இனக்குழுக்களும் தங்களுக்கான பிரத்யேக வாழிடச் சூழலை தகவமைத்து வாழ்ந்து வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு பழங்குடி இனக் குழுக்களும் தனித்துவமான மொழி, உணவு, உடை, வழிபாடு போன்றவற்றை கடைபிடித்து வருகின்றனர்.

ஆண்கள் சமைக்கும் தினை பொங்கல்

பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த கோத்தர் பழங்குடிகள் கோக்கால் என்ற பெயரில் அழைக்கப்படும் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மட்பாண்ட கலை, கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மையில் ஈடுபட்டு வரும் கோத்தர் பழங்குடிகள், அய்னோர், அம்னோர், கம்பர்டாரயர் ஆகிய மூதாதையர்களை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். கோத்தர் பழங்குடிகளின் குல தெய்வ திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஊட்டி அருகில் உள்ள கொல்லிமலை கிராமத்தில் அறுவடையை கொண்டாடும் வகையில் கோத்தர் பழங்குடி ஆண்கள் சாமை தினை பொங்கல் சமைத்து இயற்கைக்கும் முன்னோர்களுக்கும் படையலிட்டு வழிபட்டு வருகின்றனர்.

`அந்தி சாயும் மாலை நேரத்தில் பொங்கல்'

பாரம்பர்யம் மிக்க இந்த தினை பொங்கல் குறித்து தெரிவித்த கொல்லிமலை கிராம மக்கள், "எங்களின் உணவு பாரம்பர்யத்தில் சாமை தினை முதன்மையான ஒன்றாக இருக்கிறது. அதனாலேயே சாமை விதைப்பும் அறுவடையையும் பெரிய திருவிழாவாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பனிக்கால அறுவடையின் போது கோயிலை திறந்து சாமை தினையை படைப்பதே முதல் நன்றியாக இன்றளவும் கடைப்பிடித்து வருகிறோம். அறுவடை செய்த சாமையை பெண்கள் ஒன்று சேர்ந்து காயவைத்தும் இடித்தும் சுத்தம் செய்வார்கள். திருவிழாவின் போது அந்தி சாயும் மாலை நேரத்தில் பொங்கல் சமைப்பது வழக்கம் என்பதால் பொங்கலுக்கான சாமை மற்றும் விறகினை பெண்கள் கொண்டு வந்து கோயிலில் கொடுப்பார்கள்.

ஆண்கள் சமைக்கும் தினை பொங்கல்

`பாரம்பர்ய உடை அணிந்து விரதம்'

பாரம்பர்ய உடை அணிந்து விரதம் இருக்கும் ஆண்கள் மட்டுமே பொங்கலை சமைக்க வேண்டும். மண் பாண்டங்களில் சமைக்கப்படும் இந்த தினை பொங்கலில் உப்பு, இனிப்பு எதுவும் சேர்ப்பதில்லை.

அப்படியே குழைய வேக வைத்து படைப்போம். பிறகு கிராமத்தில் இருக்கும் அத்தனை வீடுகளில் இருந்தும் பெண்கள் கூடகளைக் கொண்டு வந்து வாங்கிச் செல்வார்கள். பங்கில் அனைவருக்கும் சரி சமமாக இருப்பது அவசியம். யாருக்கும் கூட குறைவு கிடையாது. முன்னோர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்து குடும்பமாக உண்போம். அவரை குழம்பு மற்றும் நெய் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் நிறைவாக பசியாறும் வகையில் கோயில் மைதானத்தில் பல பானைகளில் பொங்கல் சமைக்கப்படும். முன்னோர்கள் அளித்த கொடையாக இன்றளவும் கொண்டாடி வருகிறோம். காலங்காலமாக இது தொடர்ந்து வருகிறது" என்றனர்.

வைகுண்ட ஏகாதசி: மதுரை வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம் | Photo Album

தல்லாகுளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்தல்லாகுளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்தல்லாகுளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்தல்லாகுளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்தல்லாகுளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்தல்லாகுளம்... மேலும் பார்க்க

`டிக் டாக்’ சரோஜாதேவி நினைவிருக்கிறதா? - புகுந்த வீடு கதை பகிரும் லலிதாம்பிகை

'டிக் டாக்'கில் நடிகை சரோஜாதேவி சாயலில் பிளாக் அண்ட் ஒயிட் தமிழ்த் திரைப்படங்களின் பாடல்களுக்கு அழகழகாக முக பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த லலிதாம்பிகையை நினைவிருக்கிறதா.... மேலும் பார்க்க

Pongal: `தை' மாதம் கொண்டாடப்படும் பொங்கல்; பின்னணியிலுள்ள காரணம் என்ன தெரியுமா?

தமிழர்களின் ஆகப்பெரும் மகிழ்வான பண்டிகைகளில் ஒன்று தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா.உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ... மேலும் பார்க்க

`வேண்டியது நிறைவேற வேலூரில் விளக்குப் பூஜை' அகிலாண்டேஸ்வரி அருளால் அனைத்தும் வெற்றியே வாருங்கள்!

2025 ஜனவரி 31-ம் தேதி வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்குபூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம்.... மேலும் பார்க்க

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? - பாடி வழிபடவேண்டிய பாடல்

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த் தம். அதாவது, ‘மகிழ்ச்சி பொங்குதல்’, ‘பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு.அவ்வகையில் நமக்குள் மகிழ்ச்சிப் பொங்கிப் பெருக வழிசெய்யும் அற்புத ந... மேலும் பார்க்க