செய்திகள் :

Pongal: `தை' மாதம் கொண்டாடப்படும் பொங்கல்; பின்னணியிலுள்ள காரணம் என்ன தெரியுமா?

post image
தமிழர்களின் ஆகப்பெரும் மகிழ்வான பண்டிகைகளில் ஒன்று தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா.

உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா மத உணர்வும், இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. பல ஆண்டுகளாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்தப் பொங்கல் விழா 'தை 1' ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணமாக தமிழறிஞர்கள் சொல்கிற காரணங்களை தொகுத்திருக்கிறோம்.

பொங்கல் திருவிழா
பொங்கல் திருவிழா

மாதங்கள் பன்னிரண்டிலும் தனிப்பெரும் மகிமை பெற்றது 'தை' மாதம். 'தை' என, ஒற்றை எழுத்தால் ஆன இம்மாதம்தான், மிகச் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனச் சொல்லி, சூரியன் தன் பாதையை மாற்றிக்கொண்டு போகும் விஞ்ஞான உண்மையைச் சொன்னது இம்மாதம். ஏன் 'தை 1'ஆம் நாள் அன்று பொங்கல் கொண்டாடுகிறோம் அதன் பின்னால் இருக்கும் வானிலை அறிவியல் காரணம் என்னவென்று பார்ப்போம்.

வானியல் மாற்றங்களையும், அதனைச் சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில்தான் திருவிழக்களாகக் கொண்டாடினார்கள். சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் 'சித்திரை 1' எனவேதான் தமிழர்கள் 'சித்திரை 1' புத்தாண்டாகக் கொண்டாடினர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் துல்லியமாகக் கணித்து கூறிய வானியல் சாஸ்திரத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 'சித்திரை 1', 'ஆடி 1', 'ஐப்பசி 1 ', 'தை 1' இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுவதற்கு காரணம் ஏதோ ஒரு சடங்கு அல்லது பழக்கம் என்று நினைப்போம்.

பொங்கல் திருவிழா
பொங்கல் திருவிழா

ஆனால் இதற்குப் பின்னால் மற்றொரு காரணத்தைச் சொல்லியிருக்கிறார்கள். " சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கில் உதிக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும். அதன்பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்புறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து வடகிழக்கு, தென்கிழக்கு என்று மாறிய பிறகு கிழக்கிற்கு வருகின்ற நேரம் சரியாக ஒரு வருடம். சரி இதற்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தனது பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள்தான் 'சித்திரை 1' அதனை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். பிறகு வடகிழக்கிற்கு வரும் நாள்தான் 'ஆடி 1'. அதனை ஆடி பிறப்பாகக் கொண்டாடுகிறோம் . மறுபடியும் கிழக்கிற்கு வருவது 'ஐப்பசி 1' அதனை தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்.

பொங்கல் திருவிழா
பொங்கல் திருவிழா

மீண்டும் சரியாக தென்கிழக்கிற்கு வரும்போது 'தை 1' அந்த நாளைத்தான் நாம் பொங்கலாகக் கொண்டாடுகிறோம். வேளாண்மை தொழிலாகக் கொண்டிருக்கும் மக்கள் தையில் அறுவடையை முடித்து விவசாயத்துக்கு மூலமாக இருந்த சூரியனுக்கு நன்றி கூறும் வகையில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். அறுவடையை முடித்துவிட்டு மீண்டும் மாதங்களையும் அதற்கேற்ற வானிலை சூழலையும் பொறுத்து பல விதமான பயிர்களையும் செடிகளையும் விதைக்கின்றனர்.

தை, மாசி, பங்குனியில் பீர்க்கங்காய், கீரைகள், கோவைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தியும் பங்குனி, சித்திரையில் செடி முருங்கை, வெண்டை, புடலை போன்றவற்றை பயிரிடுவார்கள்.

ஆனி, ஆடியில் மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டைப்பயறு, துவரை போன்றவற்றை பயிரிடுவார்கள்.

பொங்கல் திருவிழா
பொங்கல் திருவிழா

வானிலை மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவகால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திருவிழாக்களாகக் கொண்டாடினார்கள். பராம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள வாழ்வியலையும் அறிவுசார் விஷயங்களையும் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.

`வேண்டியது நிறைவேற வேலூரில் விளக்குப் பூஜை' அகிலாண்டேஸ்வரி அருளால் அனைத்தும் வெற்றியே வாருங்கள்!

2025 ஜனவரி 31-ம் தேதி வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்குபூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம்.... மேலும் பார்க்க

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? - பாடி வழிபடவேண்டிய பாடல்

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த் தம். அதாவது, ‘மகிழ்ச்சி பொங்குதல்’, ‘பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு.அவ்வகையில் நமக்குள் மகிழ்ச்சிப் பொங்கிப் பெருக வழிசெய்யும் அற்புத ந... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: `50 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்' -இஸ்கானுடன் இணைந்து செய்யும் அதானி குழுமம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முடிவடைகிறது. இக்கும்பமேளாவிற்காக நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக... மேலும் பார்க்க

Live : Srirangam Ranganatha Swamy Temple Vaikunda Ekadasi Utsav | பரமபத வாசல் திறப்பு |

108 திவ்ய தேசங்களில் முதன்மையான உலகப் புகழ்பெற்ற ஶ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் பகல்பத்து ராப்பத்து உற்சவத்தில் இன்று பரமபத வாசல் திறப்பு வைபவம். மேலும் பார்க்க

திருநெல்வேலி: `பொங்கலோ பொங்கல்' - தயாராகும் மண்பானைகள், மண்அடுப்புகள் |Photo Album

திருநெல்வேலி: பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் பொங்கல் மண்பானைகள்.! மேலும் பார்க்க