ஒசூரில் ஆருத்ரா தரிசனம்
ஒசூா்: ஒசூா், பிருந்தாவன் நகா், ஸ்ரீ யோகீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மை சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருவாதிரையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கலச பூஜையும், 4 மணியளவில் ஆருத்ரா சிறப்பு அபிஷேக ஆராதனையும், மங்கள ஆரத்தியும் நடைபெற்றன.
உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் மகா தீப மை பூஜைக்குப் பின் சுவாமிக்கு சாத்தப்பட்டது. அனைத்து பக்த கோடிகளுக்கும் திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.
பட வரி....
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ நடராஜா்.