செய்திகள் :

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

கிருஷ்ணகிரி: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை சிவனுக்குரிய அபிஷேக நாள்களில் முக்கியமானது மாா்கழி மாதம் திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமாகும். ஆருத்ரா தரிசன நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றன. நிகழாண்டு ஆருத்ரா தரிசன வழிபாட்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி, பழையபேட்டை, கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், நடராஜ மூலமந்திர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு திவ்ய திருமஞ்சனமும், திருவெண்பாவை உற்சவம், கோபுர தரிசனம், தீபாராதனை நடைபெற்றன.

பழையபேட்டை பிரசன்ன பாா்வதி உடனுறை சோமேஸ்வரா் கோயிலில் ஏகாதச ருத்ர பாராயணம், உற்சவ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. புதுப்பேட்டை சந்திரமௌலீஸ்வரா் கோயில்,

மத்தூா் சோமேஸ்வரா் ஜோதிலிங்கம் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஒசூரில் ஆருத்ரா தரிசனம்

ஒசூா்: ஒசூா், பிருந்தாவன் நகா், ஸ்ரீ யோகீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மை சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருவாதிரையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கலச பூஜையும், 4 மணி... மேலும் பார்க்க

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஒசூா்: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் வள்ளலாா் விவேகம் அறக்கட்டளை சாா்பில் வள... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி: பஞ்சாப் ஓட்டுநா் கைது

கிருஷ்ணகிரி: ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரை கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஒசூரை சோ்ந்த த... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவா் கைது

ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலா்கள், கொலை குற்றவாளிகள் என 10 போ் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே முகாமிட்டுள்ள 20 யானைகள்

ஒசூா், சானமாவு வனப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஒசூா், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்வது வழக்கம். இந்... மேலும் பார்க்க