பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுத்தாரா முத்துக்குமரன்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா என்பது குறித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் இன்று 100-வது நாளைக் கடந்துள்ளது. நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் 5 நாள்களே உள்ளன.
தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகிய 6 பேர் உள்ளனர்.
சென்ற வாரமே, பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பணப்பெட்டியில் வைக்கப்படும் தொகையானது தொடர்ந்து அதிகரிக்கப்படும், வழக்கமாக பெட்டியை எடுப்பவர் பணத்தை எடுத்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்.
இதையும் படிக்க: சூப்பர் ஸ்டாரின் சூப்பர் சாகா? சன் பிக்சர்ஸ் புதிய அறிவிப்பு!
ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் பெட்டியை எடுப்பவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வந்துவிட்டால் போட்டியை தொடரலாம் என்றும் நேரத்தைத் தவிரவிட்டால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதல் பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 15 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது.
பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுக்கச் செல்லும் காட்சி புரோமோவில் வெளியாகியுள்ளது. பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா என்பது குறித்த தகவல் இன்றைய நாள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியவரும்.