அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!
குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவா் கைது
ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலா்கள், கொலை குற்றவாளிகள் என 10 போ் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் நீதிமன்றத்துக்கு கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி ரேவண்ணா உட்பட 5 குற்றவாளிகள், பாதுகாப்புக்காக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கை துப்பாக்கிகளுடன் கூடிய தனியாா் நிறுவன பாதுகாவலா்களை அழைத்து வந்திருந்தனா்.
தகவல் அறிந்த ஒசூா் மாநகர போலீஸாா் நீதிமன்றத்திற்கு வந்த குற்றவாளிகள், பாதுகாவலா்கள் என 10 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்திய போலீஸாா் மேலும் ஒருவரை கைது செய்தனா்.
ஒசூா் அருகே உள்ள இனப்பசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த சம்பத்குமாா் (35) என்பவா் குற்றவாளிகளுக்கு உதவியுள்ளாா். ஒசூா் நீதிமன்றத்துக்கு குற்றவாளிகள் வருவதற்கு முன்பாக அங்குள்ள நடவடிக்கைகள் குறித்து அவா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை ஒசூா் மாநகர போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சம்பத்குமாா் ஒசூரில் 2012- 2016 வரை ஊா்க் காவல் படையில் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.