செய்திகள் :

’’பெண்களையும் சிறுமிகளையும் அழிக்கப் பார்க்கிறார்கள்’’ - பாகிஸ்தான் மாநாட்டில் கொதித்த மலாலா..!

post image

மைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூகச் செயற்பாட்டாளரான மலாலா யூசஃப்சாய் தன் தாய்நாடான பாகிஸ்தானில் நடத்தப்படும் பெண் கல்வி குறித்த உச்சி மாநாட்டில் கடந்த ஜனவரி 11,12 ஆகிய தேதிகளில் கலந்துகொண்டு தாலிபன்களை கண்டித்து பேசியுள்ளார். அப்போது, பெண்களை மனிதர்களாக தாலிபன்கள் கருதுவதில்லை எனவும், கலாசார மற்றும் மதத்தின் பெயரை முன்வைத்து தங்கள் குற்றங்களை நியாயப்படுத்தி பாலினவெறியை அவர்கள் நிறுவி வருவதாகவும் குற்றம் சாட்டிய மலாலா, தங்களது சட்டங்களை திணித்து, அதை மீறத் துணிந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை அடித்து கைது செய்வது அல்லது காயப்படுத்துவதன் மூலம் தாலிபன்கள் தண்டிப்பதையும் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

மலாலா

தாலிபன்களின் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய மலாலா, ‘’2021-ல் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தை கைபற்றிய பின், இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் பெண்களின் வாழ்வில் பல கட்டுப்பாடுகளை திணித்துள்ளனர். பெண்கள் பள்ளி, பல்கலைக்கழகம் சென்று படிக்கவும், அரசாங்க பணியில் சேரவும் தடை விதித்துள்ளனர்.

பொதுவாழ்வின் அனைத்து அம்சத்திலிருந்தும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அகற்றி, சமூகத்திலிருந்து அவர்களை அழிக்க விரும்பும் தாலிபன்களின் கொள்கைகளுக்கும் இஸ்லாமிய போதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முஸ்லீம் தலைவர்கள் உங்கள் குரலை உயர்த்தி இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக பேச வேண்டிய நேரம் இது" என கூறிய மலாலா, தாலிபன் அரசாங்கத்தை சட்டப்பூர்வமாக மறுப்பதன் மூலம் உண்மையான தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என முஸ்லீம் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மலாலா

தவிர, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மலாலா, "காஸாவிலுள்ள பல்கலைக்கழகம் மீது குண்டு வீசியுள்ளனர்; 90 சதவிகித்துக்கும் அதிகமான பள்ளிகளை அழித்துள்ளனர். பள்ளிக்கட்டிடங்களில் தங்கியிருந்த பொதுமக்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் பாலஸ்தீன குழந்தைகளின் எதிர்காலத்தை சீராக்கவும் சர்வதேச தலையீட்டின் தேவை மிக அவசியம்’’ என அந்த மாநாட்டில் அழுத்தம்திருத்தமாக தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார் மலாலா.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Pakisthan: மீண்டும் தாய்நாட்டுக்கு செல்லவிருக்கும் மலாலா! காரணம் இதுதான்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூகச் செயற்பாட்டாளரான மலாலா யூசஃப்சாய் தன் தாய்நாடான பாகிஸ்தானில் நடத்தப்படும் பெண் கல்வி குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் கல்வியை வளர்க்... மேலும் பார்க்க

நொய்டா: பெண் பயிற்சியாளர்களை நியமிக்க மகளிர் ஆணையம் பரிந்துரை; காரணம் இதுதான்!

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் பெண் பயிற்சியாளர்களை கட்டாயம் நியமிக்க வேண்டுமென்று நொய்டாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

`வாஷ் ரூம் கேமராவுக்கு பயந்துக்கிட்டிருக்கும் என் பேத்திக்கு...' - ஒரு பாட்டியின் வாட்ஸ்அப் மெசேஜ்

அன்புள்ள பேத்திக்கு,``உன் பாட்டியோட whatsapp மெசேஜ். கடிதம் எழுதற காலத்துல நான் பிறந்தேன். நீயோ ஸ்மார்ட்போன் காலத்துல பிறந்தவ. உனக்கு ஒரு தகவல் சொல்லணும்னா அதை வாட்ஸ்அப்ல அனுப்புனா மட்டும்தான் உன் கவன... மேலும் பார்க்க

Rewind 2024: உலகை திரும்பிப் பார்க்க வைத்த 10 பெண்கள்!

'நாடாளுமன்றத்தில் நடனமாடிய' ஹனா-ராஹிட்டி மைபி-கிளார்க்Top 10 Women1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான நியூசிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில், 21 வயதே ஆன முதல் இளம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஹனா-ராஹ... மேலும் பார்க்க