செய்திகள் :

நொய்டா: பெண் பயிற்சியாளர்களை நியமிக்க மகளிர் ஆணையம் பரிந்துரை; காரணம் இதுதான்!

post image

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் பெண் பயிற்சியாளர்களை கட்டாயம் நியமிக்க வேண்டுமென்று நொய்டாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மகளிர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடுத்து இந்த உத்தரவை அந்த மாவட்ட விளையாட்டு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

swimming pool

நொய்டா விளையாட்டுத்துறைக்கு உட்பட்ட சுமார் 400 ஜிம்கள், 300 நீச்சல் குளங்கள் மற்றும் 100 விளையாட்டு அகாடமிகளுக்கு இவ்விதி பொருந்தும். ஏற்கெனவே பெண் பயிற்சியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் எந்த மாற்றத்தையும் செய்ய தேவையில்லை. ஆனால், குறைந்தபட்ச சதவீத அளவிலாவது பெண்களை மேலே சொல்லப்பட்டுள்ள நிறுவனங்களில் கட்டாயம் பணியமர்த்த வேண்டும். தவிர, பயிற்சியாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அட்டைகளை எடுத்துச் செல்வதையும், அவர்களுடைய பணிகளை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்களையும் கட்டாயம் நிறுவ வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குள் செயல்படும் அனைத்து உடற்பயிற்சி நிறுவனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். உரிமையாளர்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்க பெண் பயிற்சியாளர்களை பணியமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை இரண்டு நாட்களுக்குள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் அனைத்து பயிற்சியாளர்களின் விவரங்களையும் அவர்களின் அடையாளச் சான்றுகளின் புகைப்பட நகல்களையும் வழங்க வேண்டும்" என நொய்டாவின் கவுதம் புத் நகரின் துணை மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.

Yoga

அதிக செலவு மற்றும் தகுதிவாய்ந்த பெண் பயிற்சியாளர்கள் குறைவாக இருப்பதை மேற்கோள் காட்டி இந்த புதிய ஆணையை சில வணிக உரிமையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். பாலினத்தைவிட பயிற்சியாளரின் திறமைக்கு முன்னுரிமை தருவதே அவசியம் என சுட்டிக்காட்டி சிலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

`வாஷ் ரூம் கேமராவுக்கு பயந்துக்கிட்டிருக்கும் என் பேத்திக்கு...' - ஒரு பாட்டியின் வாட்ஸ்அப் மெசேஜ்

அன்புள்ள பேத்திக்கு,``உன் பாட்டியோட whatsapp மெசேஜ். கடிதம் எழுதற காலத்துல நான் பிறந்தேன். நீயோ ஸ்மார்ட்போன் காலத்துல பிறந்தவ. உனக்கு ஒரு தகவல் சொல்லணும்னா அதை வாட்ஸ்அப்ல அனுப்புனா மட்டும்தான் உன் கவன... மேலும் பார்க்க

Rewind 2024: உலகை திரும்பிப் பார்க்க வைத்த 10 பெண்கள்!

'நாடாளுமன்றத்தில் நடனமாடிய' ஹனா-ராஹிட்டி மைபி-கிளார்க்Top 10 Women1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான நியூசிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில், 21 வயதே ஆன முதல் இளம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஹனா-ராஹ... மேலும் பார்க்க