செய்திகள் :

மதுரை: முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பாஜக நிர்வாகி; காரணம் என்ன?

post image

முதல்வர் படத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக நிர்வாகிகள்
பாஜக நிர்வாகிகள்

மனு அளிக்க வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் எனத் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி முன்பு பேசினார். கடந்த நான்கு ஆண்டுகளில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என நினைக்கிறோம்.

மதுரை மாவட்டத்தில் 318 கடைகள் உள்ளன. இவற்றைப் பாதியாகக் குறைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் அடைக்க வேண்டும். மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு, பூரண மதுவிலக்குக் கொண்டு வந்தால் வரவேற்போம்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

அரசு அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள், கூட்டுறவு மருந்துக் கடைகள் என அனைத்திலும் முதலமைச்சர் படம் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக்கடைகளில் மட்டும் ஏன் முதல்வர் படம் வைக்கக் கூடாது? அதன் காரணமாகத்தான் தற்போது மதுரை கலெக்டரை சந்தித்து முதல்வர் படத்துடன் மனு அளிக்க வந்தோம்" என்றார்.

எப்போதும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருகின்றவர்களிடம் விசாரித்து அனுப்பும் காவல்துறையினர் முதலமைச்சர் படத்துடன் வந்தவர்களை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Cut செய்யப்படும் லைவ் - சட்டமன்றத்தில் நடப்பதை காட்ட அஞ்சுகிறதா DMK அரசு? | ADMK | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* UGC விதிமுறைகளுக்கு எதிராக இன்று சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம்?* நன்கொடைப் பெட்டியில் விழுந்த ஐபோன் ஏலத்தில் விற்கப்பட்டதா?* நியமிக்கப்பட்ட நேரத்தில் அமைச்சர்கள் க... மேலும் பார்க்க

TVK : 'தை பிறந்தவுடன் புதிய அறிவிப்பு? ; திடீர் நிர்வாகிகள் கூட்டம்'- விஜய் முகாமில் என்ன நடக்கிறது?

விஜய்யின் த.வெ.க கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் புதிய நிர்வாகிகள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.TVK விஜய்கடந்... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்: ``தேர்தல் வரும்போது பார்க்கலாம்!" - சட்டமன்றத்தில் துரைமுருகன்

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு ரூபாய் பணம் தரப்போவதாக ஆட்சியாளர்கள் அறிவிக்கப் போகிறார்கள் என்பது பேசுபொருளாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அது பெரும் விவ... மேலும் பார்க்க

பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்' - அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்க... மேலும் பார்க்க