செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்: ``தேர்தல் வரும்போது பார்க்கலாம்!" - சட்டமன்றத்தில் துரைமுருகன்

post image

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு ரூபாய் பணம் தரப்போவதாக ஆட்சியாளர்கள் அறிவிக்கப் போகிறார்கள் என்பது பேசுபொருளாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அது பெரும் விவாதப்பொருளாகவே மாறியிருக்கிறது.

ஸ்டாலின்

காரணம், இந்த ஆண்டு எப்போதும் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் எதுவும் இல்லை என்பதே. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோதிலும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பரிசுத் தொகுப்புடன் பணம் தர முடியவில்லை என ஆளும் தி.மு.க அரசு விளக்கமளித்தது.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கியும் வைத்தார். இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தி.மு.க மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

முன்னதாக, இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தி.மு.க-வை விமர்சித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தசாமி, ``அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் பண்டிகையின்போது ரூ. 2,500 வழங்கப்பட்டது. ஆனால், அப்போது ரூ. 5,000 கொடுக்க வேண்டும் என்று தி.மு.க கூறியது. இப்போது, அதே தி.மு.க ரூ. 1,000 கூட கொடுக்கவில்லை." என்று கூறினார்.

அமைச்சர் துரைமுருகன்

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மாரிமுத்து, ``இந்தப் பொங்கல் பண்டிகை இனிக்க வேண்டும் என்றால், ரூ. 1,000 கொடுக்க வேண்டும்." என்றார். அப்போது எழுந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ``2021-ல் தேர்தல் இருந்தது அதனால் நீங்கள் (அ.தி.மு.க) ரூ.2,500 கொடுத்தீர்கள். இப்போது தேர்தல் இல்லை. தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு கொடுப்பதைப் பற்றிப் பார்க்கலாம்." என்று கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Cut செய்யப்படும் லைவ் - சட்டமன்றத்தில் நடப்பதை காட்ட அஞ்சுகிறதா DMK அரசு? | ADMK | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* UGC விதிமுறைகளுக்கு எதிராக இன்று சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம்?* நன்கொடைப் பெட்டியில் விழுந்த ஐபோன் ஏலத்தில் விற்கப்பட்டதா?* நியமிக்கப்பட்ட நேரத்தில் அமைச்சர்கள் க... மேலும் பார்க்க

TVK : 'தை பிறந்தவுடன் புதிய அறிவிப்பு? ; திடீர் நிர்வாகிகள் கூட்டம்'- விஜய் முகாமில் என்ன நடக்கிறது?

விஜய்யின் த.வெ.க கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் புதிய நிர்வாகிகள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.TVK விஜய்கடந்... மேலும் பார்க்க