ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பொறுப்பு புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், இந்திய ஆட்சிப் பணியில் உள்ளோருக்காக ஜன. 6 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க முசூரி சென்றுள்ளாா்.
இதையடுத்து, காரைக்கால் துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணனிடம் ஆட்சியா் (பொறுப்பு) வழங்கப்பட்டது.
இந்நிலையில், காா்னிவல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் தரவேண்டியது உள்ளிட்டவை இருப்பதால், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை புதுவை அரசு செயலகம் வியாழக்கிழமை வெளியிட்டது.