செய்திகள் :

காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின் போது திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மன அமைதி இழக்கும் நிலை ஏற்பட்டது.

வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அஷ்டபுஜம் பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

பல ஆண்டு காலமாக முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர்களிடையே திவ்ய பிரபந்தங்கள் பாடுவதில் பெரும் வாக்குவாதம் ஏற்படுவதோடு மோதல் ஏற்படும் சூழலும் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதும் பின்னர் காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் சமரசம் செய்து வைப்பதும் அதன் பின்னர் சாமி புறப்பாடு ஊர்வலம் என நடைபெறுவதும் வழக்கமாகி வருகிறது.

இதையும் படிக்க |சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

வடகலை-தென்கலை பிரிவினர்களிடையே நிலவும் பிரச்னையில் மன அமைதிக்காகவும் இறையருள் பெறுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருதரப்பினரிடையே ஏற்படும் வாக்குவாதத்தை கண்டு மிகுந்த மனம் வருத்தம் அடைகின்றனர்.

இந்த நிலையில், ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சில நிமிடங்களுக்கு முன்பு திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினரும் அறநிலையத்துறையினரும் சமரசம் செய்து கொண்டிருக்கும் போதே இரு பிரிவினரும் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்ததால் பிரச்னை தொடர்ந்ததால், உடனடியாக அனைவரும் பாடிவிட்டு வெளியே செல்லுமாறும்,பக்தர்கள் நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்கு காத்திருக்கிறார்கள் என கூறி அனைவரையும் மெல்ல வெளியேற்றினர்.

காஞ்சியில் திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருதரப்பினருக்கிடையே ஏற்படும் பிரச்னை தீராத பிரச்னையாக அவ்வப்போது எழுவதும் ஒவ்வொரு நாளும் இதனை சமாதானம் செய்வது என்பது அனைத்து தரப்பினரிடையே பெரும் சங்கடங்களை உருவாக்கி வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் பிரச்னை கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே முகம் சுழிக்க வைக்கிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் சம்பா - தாளடி பருவ அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலைய... மேலும் பார்க்க

கார் மரத்தில் மோதி விபத்து: 2 ஐயப்ப பக்தர்கள் பலி

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பால்காரன் சாலைப் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நக... மேலும் பார்க்க

காட்டுப் பன்றியை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு அனுமதி!

விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.காட்டுப் பன்றிகளின் தொல்லையால்... மேலும் பார்க்க

கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே கடல் பாலம்: அமைச்சர் எ.வ. வேலு

கலங்கரை விளக்கம் மற்றும் நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் பாலம் அமைக்கப்படும் என்று பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் பேரவைத் துணை தலைவ... மேலும் பார்க்க

புதுச்சேரி கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

புதுச்சேரி அருகே கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்களில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா’ ‘கோபாலா’ என்ற கோ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை(ஜன.10) 7.05 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோ... மேலும் பார்க்க