செய்திகள் :

புதுச்சேரி கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

post image

புதுச்சேரி அருகே கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்களில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா’ ‘கோபாலா’ என்ற கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டனர்.

திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம் மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்,மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி புதுச்சேரி அருகே கலிங்கமலையில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 1-ஆம் தேதி பகல் பத்து திருவிழாவாக தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல்பத்து திருவிழாவின் 10-ஆம் நாள் பரமபதநாதன் சேவையில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் எழுந்தருளினர். தொடர்ந்து திருமங்கையாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையும் படிக்க |ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு துலாம் லக்னத்தில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பாமா, ருக்மணி சமேதராக ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி பரம நாதனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் சொர்க்க வாசலை திறந்தபோது அதிகாலை முதலே வருகை புரிந்து இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் மக்கள் சொர்க்கவாசலுக்குள் நுழைந்து கோபாலா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க ஸ்ரீரங்கநாத பெருமாள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். இதில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ். அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், கொம்பாக்கம் வேங்கடாசலபதி பெருமாள் கோவில், வடுக்குப்பம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட புதுச்சேரியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மலப்புரம் திருவிழாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் பலி!

கேரள மாநிலம் மலப்புரத்தில் மசூதி திருவிழாவின்போது அழைத்து வரப்பட்ட யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.மலப்புரத்தின் திரூரிலுள்ள மசூதி திருவிழாவிற்காக கடந்த ஜன.8 அன்று யானை ஒ... மேலும் பார்க்க

மது போதையில் அண்ணனைக் கொன்ற தம்பி கைது!

ஒடிசா மாநிலம் தென்கனால் மாவட்டத்தில் மது போதையில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாவட்டத்தின் ஹிந்தோல் பகுதியைச் சேர்ந்தவர் சுனந்தா நாயக் (வயது 37), மது போதைக்கு ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று(ஜன. 9) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட... மேலும் பார்க்க

மின்மதி 2.0 செயலி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கி வைத்தார்!

மின்மதி 2.0 கைபேசி செயலியை துணை முதல்வர் உதயநிதி தொடக்கி வைத்தார்.இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.1.2025) தலைமைச் செயலகத்தில், மகளிர் சுய உதவி... மேலும் பார்க்க

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல்! இந்தியா சறுக்கல்!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்ட நாடுகளின் பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஒரு நாட்டின் குடிமக்கள் வைத்திருக்கும் பாஸ்போர்ட்டின் மூலம் எத்தனை சர்வதேச நாடுகளுக்கு வ... மேலும் பார்க்க

திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கே. கே. நகர் பகுதியைச் சேர்ந்த வில்சன் மைக்கில் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீரங்கம் எல்லை... மேலும் பார்க்க