What to watch on Theatre & OTT: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ - இந்தாண்டு ...
முதல் ஒருநாள் போட்டி: இந்திய மகளிருக்கு 239 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து மகளிரணி இந்திய மகளிருக்கு எதிரான முதல் போட்டியில் 238 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா கேப்டனாக செயல்படுகிறார். ஹர்மன்ப்ரீத் கௌருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட் ஆடுகளத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அயர்லாந்து மகளிரணி 238/7 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அயர்லாந்து அணி கேப்டன் கேபி லெவிஸ் 92 ரன்களும் லீச் பால் 59 ரன்களும் எடுத்தார்கள்.
இந்திய அணி சார்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள், டிட்ஸ் சாது, சயலி சட்கரே, தீப்தி சர்மா தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.