செய்திகள் :

மணல் காகித மோசடியாளர்..! கிண்டல்களுக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்!

post image

ஆஸி. டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன்னைப் பற்றிய மணல் காகித மோசடியாளர் (சேண்ட்பேப்பர்கேட்) கிண்டலுக்கு பதிலளித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. அணி 3-1 என வெற்றி பெற்றது. தனது மனைவிக்கு 2ஆவது குழந்தை பிறக்க உள்ளதால் கம்மின்ஸ் விடுப்பில் சென்றுள்ளார். இலங்கை தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாகியுள்ளார். கம்மின்ஸுக்கு முன்னதாக ஸ்மித்தான் கேப்டனாக இருந்து வந்தார்.

மணல் காகித மோசடியாளர் - கிண்டல்கள்

2108இல் தென்னாப்பிரிக்காவுடனான் போட்டியில் ஸ்மித் தலைமையிலான அணியில் பந்தினை சேதப்படுத்தியதற்காக ஸ்மித் கடுமையாக தண்டிக்கப்பட்டார்.

அதன் விளைவாக 2 ஆண்டுகள் விளையாட தடை, கேப்டனாக பதவி வகிக்க ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. கம்மின்ஸ் இல்லாத நேரங்களில் மட்டுமே ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார்.

சிட்னி டெஸ்ட்டில் ஸ்மித் ஆட்டமிழந்தபோது விராட் கோலி தனது பாக்கெட்டில் எதுவுமில்லை. பந்தினைச் சேதப்படுத்த எதையும் உபயோகிக்கவில்லை என ஸ்மித்தை கிண்டல் செய்வார்.

இந்திய ரசிகர்களும் தங்களது தோல்வியின் கவலையைப் போக்க இவ்வாறு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

கருத்து கூறுவது அவரவர் உரிமை

ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தைக்கூற உரிமை இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்ததைக் கூறலாம். நான் எனது நிலையில் மிகவும் சௌகரியாகவே உணர்கிறேன்.

நீண்ட காலமாக எங்களது அணி நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. அனைவரும் தங்களது கருத்தினை கூறுவார்கள். நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன்.

பந்துவீச்சாளர்கள் அசத்தல்

வெற்றியில் பங்கெடுத்தது மகிழ்ச்சி. பெர்த் தோல்விக்குப் பிறகு மீண்டு வந்தது சிறப்பாக இருந்தது. இது குழுவுக்கு கிடைத்த வெற்றி. எங்களது பந்துவீச்சாளர்கள் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்கள். ஸ்காட் போலண்ட் வந்தவிதம் அற்புதமானது. அந்தக் கணத்தில் அவர்செய்தது எல்லாம் நம்பமுடியாதது.

10,000 ரன்களை தவறவிட்டது

1 ரன். ஆமாம், அந்த நேரத்தில் சிறிது வருத்தமாக இருந்தது. என்னுடைய நண்பர்களுக்கு மத்தியில் நான் 10ஆயிரம் ரன்களை கடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலேவில் (இலங்கை டெஸ்ட்) இதை முதல் விஷயமாக செய்து முடிப்பேன்.

தொடர் முழுவதும் என மனதை எந்தவிதமான நோக்கமுமின்றி திரிந்ததால் அதை இழந்துவிட்டேன். 10 ஆயிரம் ரன்களை தாண்டுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான் என்றார்.

இலங்கை உடனான ஆஸி. டெஸ்ட் ஜன.29ஆம் தேதி தொடங்குகிறது.

இளம் வீரர்களை வழிநடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: ஸ்டீவ் ஸ்மித்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிர... மேலும் பார்க்க

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிம் இக்பால், அலெக்ஸ் ஹேல்ஸ்! என்ன பிரச்னை?

பிபிஎல் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ், தமிம் இக்பாலுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. போட்டி முடிந்து கை குழுக்க சென்றபோது தமிம் இக்பால் தன்னை தனிப்பட்ட விதத்தில் பேசியதாக குற்றம்சாட்டி வாக... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.விஜய் ஹசாரே தொடரில் விளையாடிவந்த இந்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

50 ஆண்டுகளை நிறைவு செய்த வான்கடே மைதானம்!

வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது.மும்பை வான்கடே மைதானம் கடந்த 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மைதானம் அமைக்கப... மேலும் பார்க்க

விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், முன்னணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானில் நட... மேலும் பார்க்க