செய்திகள் :

``நல்ல கணவரை தேடிட்டிருக்கேன்; முதல் கல்யாண பத்திரிகை உங்களுக்குதான்..!’ - நடிகை சித்தாரா பர்சனல்

post image

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை சித்தாரா.

''நான் தமிழ் சினிமாவுல பரபரன்னு நடிச்சிட்டிருந்தப்போ, ஒருநாள் ஒரு ஹாஸ்பிடல்ல இருந்து, என் அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு ஒரு போன் கால் வந்துச்சு. பதறிப்போய் கேரளாவுக்கு ஓடினேன். அப்பா ரோடு கிராஸ் பண்றப்போ பைக் இடிச்சி, தலையில பயங்கர அடி. எவ்வளவோ போராடியும் அப்பாவைக் காப்பாத்த முடியல. அப்பா இறந்தது தெரிஞ்சா, எங்கம்மாவால அதைத் தாங்கிக்கவே முடியாது. அதனால, லண்டன்ல மெடிக்கல் படிச்சிட்டிருந்த என் சின்னத்தம்பி இந்தியாவுக்கு வர்ற வரைக்கும் அப்பா இறந்துட்டார்ங்கிறதை அம்மாகிட்ட நான் சொல்லவே இல்ல. நான் அழுதா அம்மா கண்டுபிடிச்சிடுவாங்கன்னு என் தம்பி வீட்டுக்கு வர்ற வரைக்கும் நான் அழவும் இல்ல. உண்மையைச் சொல்லணும்னா, அன்னிக்கு நான் உள்ளுக்குள்ள துண்டு துண்டா உடைஞ்சுப் போயிருந்தேன்!'' - நடிகை சித்தாராவின் இந்தப் பேட்டி, தாங்கிக்கவே முடியாத பிரச்னை வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கிட்டு அவர் எந்தளவுக்கு மன உறுதியா இருப்பார்ங்கிறதுக்கு ஓர் உதாரணம்.

நடிகை சித்தாரா

சித்தாராவுக்குத் தமிழ்நாட்டுல அறிமுகம் தேவையா என்ன? 'கேளடி கண்மணி பாடகன் சங்கதி'னு இளைஞர் பட்டாளத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வெச்ச 'புது வசந்தம்'தான் இந்த அழகு தேவதை. இப்ப வரைக்கும் சித்தாரா அப்படின்னாலே, மரியாதை கலந்த அன்புதான் எல்லார் மனசுலயும் மேலோங்கி நிற்கும். இந்த ஹோம்லி குயின் பிறந்தது திருவனந்தபுரத்துல இருக்கிற கிளிமானூர்ங்கிற ஊர்ல. 'சித்தாரா'ங்கிறது அவரின் அம்மா வெச்ச பேர். அப்பா, கேரள மின்சாரத்துறையில இன்ஜினீயரா இருந்திருக்கார்.

அம்மாவும் அதே மின்சாரத்துறையில ஆபீஸரா இருந்திருக்காங்க. சித்தாராதான் வீட்ல மூத்தப்பொண்ணு. அவருக்குப் பின்னாடி ரெண்டு தம்பிகள். சித்தாராவோட அப்பாவுக்குப் பிள்ளைங்களை டாக்டராக்கணும்னு ரொம்ப ஆசை. சித்தாராவோட முதல் தம்பிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால, அவரால படிப்பைத் தொடர முடியல. ஆனா, சித்தாராவும், அவரோட ரெண்டாவது தம்பியும் அவங்கப்பா விருப்பப்பட்ட மாதிரியே சயின்ஸ் சப்ஜெக்ட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்திருக்காங்க. காலம் சித்தாராவை டாப் ஹீரோயினா ஆக்கவே, ரெண்டாவது தம்பி, அவங்கப்பா ஆசைப்பட்ட மாதிரி மெடிசன்தான் படிச்சிருக்கார்.

சித்தாரா, மோகினியாட்டத்துல எக்ஸ்பர்ட். கேரளாவுல மோகினியாட்டத்துக்குப் புகழ்பெற்ற இன்ஸ்டிட்யூட் ஒண்ணுல மோகினியாட்டம் கத்துக்கிட்டிருந்தார். தான் அடுத்து இசையமைக்க இருக்கிற ஒரு மலையாளப் படத்துக்குப் புதுமுகம் தேடி இந்த இன்ஸ்டிட்யூட்டுக்கு வந்திருக்கார் புகழ்பெற்ற இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி. அவரோட கண்கள்ல ஹோம்லியான முகமும் தெற்றுப்பல் சிரிப்புமா இருந்த 13 வயசு சித்தாரா தென்பட்டிருக்கார். நாயகியைக் கண்டுபிடிச்ச திருப்தியோட, சித்தாராவோட அப்பாகிட்ட பேச, 'சினிமா பேக்கிரவுண்டே இல்லாத குடும்பங்க எங்களோடது. என் பொண்ணுக்கு நடிக்கலாம் தெரியாது. அவ டாக்டருக்குப் படிக்க ஆசப்படுறாரு'ன்னு கண்டிப்பா சொல்லி அனுப்பியிருக்கார் அவர்.

ஆனா, விடாம பேசி, அவர் மனசை கரைச்சு, சித்தாரா நடிக்கிறதுக்கு பர்மிஷன் வாங்கியிருக்காங்க. 'சரி, இந்த ஒரேயொரு படம் மட்டும் நடிக்கலாம்'னு ஓகே சொல்லியிருக்கார் சித்தாரா. அந்தப் படத்தோட பேரு 'காவேரி.' 1986-ம் வருஷம் மலையாளத்துல வெளிவந்துச்சு. அந்தப் படத்தோட லீட் ரோல் சித்தாராதான். அவருக்கு நெடுமுடி வேணு, மம்மூட்டி, மோகன்லால்னு மூணு ஜோடி. 'சித்தாராவோட ஜாதகம் சரியில்ல; அவரை விரும்பினாலோ, கல்யாணம் செஞ்சுகிட்டாலோ அந்த ஆண் இறந்திடுவான்'கிறதுதான் கதையோட ஒன்லைன். அந்த மூடநம்பிக்கைக்கு ஏத்த மாதிரியே சித்தாராவோட வாழ்க்கையில அடுத்தடுத்து சோகங்களாவே நடக்கும். முதல் படத்துலேயே வெயிட்டான ரோல். மூணு ஜாம்பவான்கள் மத்தியில, இயல்பான நடிப்புல ஸ்கோர் செஞ்சிருப்பார் சித்தாரா.

நடிகை சித்தாரா

சித்தாராவோட டீச்சர் ஒருத்தங்க, ''கூட படிக்கிற ஸ்டூடன்ட் யாருக்காவது பாடத்துல சந்தேகம்னா, சித்தாரா அவங்களுக்கு அதை கிளியர் செய்யுறதை நான் பார்த்திருக்கேன். அவ ரொம்ப நல்லா படிக்கிறப்பொண்ணு. அதனால, வளர்ந்ததும் டீச்சராவா, இல்லன்னா டான்ஸர் ஆவான்னு நான் நினைச்சிட்டிருந்தேன்''னு, சித்தாராவோட இன்டர்வியூ ஒண்ணுல, காணொலி வழியா தன் கருத்தைச் சொல்லியிருப்பாங்க. அந்தளவுக்குப் படிப்புலேயும் மோகினியாட்டத்துலேயும் புத்தக வாசிப்புலேயும் ரொம்ப விருப்பமா இருந்திருக்காங்க சித்தாரா.

''ஷூட்டிங்ல பிரேக் கிடைக்கிறப்போ எல்லாம் ஸ்கூல் புக்ஸ், மத்த புக்ஸ்னு எதையாவது வாசிச்சுட்டே இருப்பேன். சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச பிறகும், படிப்புக்கான முக்கியத்துவத்தைச் சரியா கொடுத்து, ஃபர்ஸ்ட் கிளாஸ்லதான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். அந்த நேரத்துலதான் நடிகை சரிதா சேச்சி மற்றும் முகேஷ் ஏட்டன் வழியா தமிழ்ப் படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிது. அதுதான் கே.பி சாரோட 'புதுப்புது அர்த்தங்கள்'.

கே.பி சார், முகேஷ் ஏட்டன்கிட்ட, 'என்னோட அடுத்தப் படத்துல கீதா ஒரு ரோல் பண்றாங்க. இன்னொரு வெயிட்டான ரோலுக்கு நல்லா நடிக்கத் தெரிஞ்ச புதுமுகம் வேணும்'னு கேட்டிருக்கார். அவங்க என்னைப் பத்தி கே.பி சார் கிட்ட சொல்ல, அவரும் என்னைப் பார்க்கணும்னு சொல்ல, நான் கேரளாவுல இருந்து சென்னைக்கு வந்தேன். அதுக்கு முன்னாடி மலையாளப் படங்கள்ல நான் நடிச்சிருந்தாலும், இனிமே நம்மோட கரியர் சினிமாதான்னு நான் சீரியஸா முடிவெடுத்தது அப்போதான். அது என் லைஃபோட டர்னிங் பாயின்ட். தேங்க்ஸ் டு சரிதா சேச்சி, முகேஷ் ஏட்டா''னு ஒரு இன்டர்வியூவுல நன்றியோட பகிர்ந்திருப்பார் சித்தாரா.

நடிகை சித்தாரா

1989-ல வெளியான 'புதுப்புது அர்த்தங்கள்' ஜோதி கேரக்டர், தமிழ் சினிமாவுல பரபரப்பா பேசப்பட, சித்தாரா தமிழ் ரசிகர்களோட மனசுல அழுத்தமா இடம் பிடிச்சார். அடுத்த வருஷமே கார்த்திக்கோட 'உன்னைச்சொல்லி குற்றமில்லை', ஆனந்த்பாபுவோட 'புதுப்புது ராகங்கள்', ரகுமானோட 'புரியாத புதிர்'னு வரிசையா பல படங்கள்ல நடிச்சாங்க. அந்த வரிசையில 'புது வசந்தம்' படம்தான் அல்டிமேட்.

அந்தப் படத்துல நாலு ஆண்களோட ஒரே வீட்ல இருக்கிற ஒரு பொண்ணோட கேரக்டர்ல பர்ஃபெக்டா பொருந்தி நடிச்சிருப்பார் சித்தாரா. 'அந்த நாலு பேர்ல யாரையாவது லவ் பண்றீங்களா'ன்னு படத்துல வர்ற ஒரு கேரக்டர் கேட்கிற கேள்விக்கு, 'இல்லைங்கிற' பதிலை வாயால சொல்லாம பாடி லாங்வேஜ்லயே சொல்ற இடத்துல எல்லாரையும் வாயடைக்க செஞ்சிருப்பார் சித்தாரா. அந்தப் படத்தோட கிளைமாக்ஸ்ல, தான் லவ் பண்ற சுரேஷை உதறி எறிஞ்சிட்டு வர்ற இடத்துல சித்தாராவோட நடிப்பு 'ஆசம்' ரகம். தமிழ் சினிமாவோட பெஸ்ட் கிளைமேக்ஸ்ல 'புது வசந்தம்' படத்தோட கிளைமேக்ஸும் இருக்கிறதுக்கு சித்தாராவோட நடிப்பும் ஒரு காரணம்கிறதை யாராலும் மறுக்க முடியாது. ஆண்கள்கூட ஒரு பொண்ணு பழகினாலே அது காதல், தப்பான சகவாசம்னு பேசிய சமூகத்தோட பொதுப் புத்திக்குப் பாடம் புகட்டி, கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே வீட்ல வசிச்சாலும் கண்ணியத்துடன் வாழ முடியும்னு நிரூபிச்சு, நட்புக்கு இலக்கணம் சொன்ன அந்தப் படத்தைத் தமிழ் மக்கள் கொண்டாடியதுடன், அந்தப் படத்தோட பாடல்களுக்கும் பெரும் ஆதரவு கொடுத்தாங்க.

அந்த நேரத்துல 'சித்தாரா' மாதிரி லட்சணமான மனைவி அமையணும்னு பல ஆண்கள் சொல்ல ஆரம்பிச்சாங்க. அந்தளவுக்கு சித்தாராவோட நடிப்போட அவரோட ஹோம்லி லுக்கும் தமிழ் நெஞ்சங்களால கொண்டாடப்பட்டுச்சு.

நடிகை சித்தாரா

'புது வசந்தம்' படத்துக்கு அப்புறம் சித்தாரா, தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத நாயகியா மாறினார். 'அர்ச்சனா ஐ.ஏ.எஸ்', 'காவல் கீதம்', 'என்றும் அன்புடன்', 'தாய் தங்கை பாசம்'னு குடும்ப பாங்கா பல படங்கள்ல நடிச்சு பிரபலமானாங்க. இதுல, 'அர்ச்சனா ஐ.ஏ.எஸ்' படத்துல, தன் அம்மாவைத் தவிக்க விட்டு ஓடிய ஓர் அரசியல்வாதியை, வளர்ந்து, கலெக்டராகி புத்தி புகட்டுகிற கேரக்டர்ல தீப்பிழம்பா நடிச்சிருப்பார். 'என்றும் அன்புடன்' படத்துல திருமணம் செஞ்சுக்காமலே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கிற கேரக்டர்ல நடிச்சிருப்பார் சித்தாரா. குழந்தைமேல பாசம், அந்தக் குழந்தையோட அப்பா முரளிமேல வெறுப்புன்னு மொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்கிற ரோல்ல அதகளம் செஞ்சிருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு கிட்டத்தட்ட 200 படங்கள் நடிச்சிருக்கார் சித்தாரா.

’’குடும்பமா எல்லாரும் என் படங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால, கவர்ச்சியா நடிக்க மாட்டேங்கிறதுல உறுதியா இருந்தேன். ஸோ, நம்பர் ஒன் ஹீரோயின்கிற போட்டில ஓட வேண்டாம்னு செலக்ட்டிவ்வான படங்கள்ல மட்டுமே நடிச்சேன். என் படங்களைப் பார்த்தவங்க, என்னை அவங்க வீட்டுப்பொண்ணு மாதிரி பார்த்தாங்க. அந்த வகையில நான் லக்கி. கேமராவுக்கு முன்னாடி மட்டும்தான் நான் ஒரு நடிகை. ஷாட் முடிஞ்சதும் நான் ஒரு மகளாகிடுவேன்; ரெண்டு தம்பிங்களுக்கு அக்காவாகிடுவேன்’’னு ரொம்ப தெளிவாவும் தீர்க்கமாவும் பேசுற சித்தாரா, கவர்ச்சியான ரோல்களைத் தவிர்த்ததாலோ என்னவோ, சீக்கிரமே தங்கை கேரக்டர், குணச்சித்திர கேரக்டர்னு நடிக்க ஆரம்பிச்சார். அவற்றுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ரெண்டு படங்கள் ‘நட்புக்காக’வும், ‘படையப்பா’வும்.

நடிகை சித்தாரா

இதுல, 'நட்புக்காக' படத்தோட மொத்த கதையும் சித்தாராவைச் சுற்றித்தான் போகும். கோவக்கார அப்பா, பிடிவாதம் பிடிக்கிற தங்கச்சி, அயோக்கியனான கணவன், அப்பாவியான கணவனோட தம்பி, தன் கணவனால கொலை செய்யப்பட்ட அம்மான்னு ஒவ்வொரு சீன் பை சீன்லயும் உணர்ச்சியைக் கொட்டி நடிச்சிருப்பார் சித்தாரா. 'படையப்பா' படத்துல சித்தாரா கமிட் ஆனதுக்குப் பின்னாடி ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் இருக்கு. சித்தாராவோட மலையாள இன்டர்வியூ ஒண்ணுல, காணொலி வழியா சித்தாராவைப் பத்தி டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேசியிருப்பார். அதுல, ‘சித்தாரா தமிழ் ரசிகர்களோட ஒரு சகோதரி. அவங்களோடது ரொம்ப குடும்பப்பாங்கான முகம். ’படையப்பா’வுல சித்தாராதான் என் தங்கையா நடிக்கணும்னு ரஜினியே சொன்னார்’னு பேசியிருப்பார். சித்தாராவும் பேட்டி ஒண்ணுல இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்திருப்பார்.

"ரஜினி சார் என்கிட்ட, ’நீங்க நடிச்ச 'புது வசந்தம்' அளவுக்கு இதுல கனமான பாத்திரம் கிடையாது. ஆனா, 'படையப்பா'வுல நீங்கதான் எனக்குத் தங்கையா நடிக்கணும்’னு கேட்டார். ’ஒரே ஒரு காட்சினாலும் நான் உங்ககூட நடிப்பேன். ஏன்னா, உங்ககூட நடிக்கிறது என்னோட கனவு நிஜமாகற தருணம் அப்படி’ன்னு ரஜினி சார் கிட்ட சொன்னேன். ரஜினி சாராலதான் அந்தப் படத்துல சிவாஜி சார் கூட நடிக்கிற பாக்கியமும் கிடைச்சது"ன்னு நெகிழ்ந்துபோய் பேசியிருப்பார் சித்தாரா.

சித்தாரா தன் கூட பிறந்த தம்பிகளுக்கு மட்டுமில்லாம, இன்னொரு டாப் ஹீரோயினுக்கும் கூடப்பிறக்காத அக்காவா இருந்திருக்காங்க. அவங்கதான் நடிகை ரோஜா. 'சித்தாரா அக்கா சாக்லேட் மாதிரி. ரொம்ப ரொம்ப சாஃப்ட். க்யூட் அண்டு ஸ்வீட். நான் ரொம்ப வாலு. அக்கா ரொம்ப அமைதியான கேரக்டர். எங்கம்மா சித்தாராவைப் பார்த்துக் கத்துக்கோன்னு அடிக்கடி சொல்வாங்க. அக்கா, 'படையப்பா'வுல நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிருந்தேன். ரஜினி சார், ’என்னைப் பார்க்கவா வந்தீங்க’ன்னு கேட்டாரு. 'இல்ல சார் நான் சித்தாராவைப் பார்க்க வந்தேன். ஷி இஸ் மை எல்டர் சிஸ்டர்'னு சொன்னேன்’'னு சித்தாராகூட தனக்கிருந்த அக்கா, தங்கை பாசத்தை இன்டர்வியூ ஒண்ணுல ஹேப்பியா ஷேர் பண்ணியிருந்தார் ரோஜா.

நடிகை சித்தாரா

குணச்சித்திர ரோல்ல சித்தாரா நடிச்ச படங்கள்ல 'முகவரி'யை யாரால மறக்க முடியும்? ஒரு குடும்பத்துக்கே தாயா இருக்கிற மருமகளா பாசத்தையும் அன்பையும் அன்லிமிட்டடா கொடுத்து உருக வெச்சிருப்பாங்க. ரகுவரனுக்கு மனைவியா, அஜித்துக்கு அண்ணியா சித்தாராவோட கேரக்டர் உணர்வுபூர்வமா இருந்ததுபோலவே, 'திருநெல்வேலி' படத்துலயும் வயதுவந்த ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மாவா ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. பல வருஷம் கழிச்சு, 'பூஜை' படத்துல விஷாலின் சித்தியா நடிச்சிருப்பாங்க. சினிமா தாண்டி, சில சீரியல்களிலும் நடிச்சிருக்கார் சித்தாரா. தமிழ் சின்னத்திரையில பெரும் வெற்றி பெற்ற 'கங்கா யமுனா சரஸ்வதி' சீரியல்லயும், 'ஆர்த்தி', 'கவரி மான்கள்', 'பராசக்தி', சமீபத்துல 'பூவா தலையா'னு டெலிவிஷன் சீரியல்கள்லயும் தன்னோட பயணத்தையும் தடத்தையும் அழுத்தமா பதிவு பண்ணியிருக்காங்க.

சித்தாரா நடிக்க ஆரம்பிச்சு 38 வருஷங்களாயிடுச்சு. பல வருஷங்களுக்கு முன்னாடி கொடுத்த இன்டர்வியூ ஒண்ணுல, "எனக்கு நடிக்க பிடிச்சிருக்கு. என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நான் நடிக்கணும்னு ஆசைப்படுறேன்"னு சொல்லியிருப்பார். அன்னிக்குச் சொன்ன மாதிரி இன்னிக்கு வரைக்கும் சினிமா, சீரியல்னு ஆக்டிவ்வாகவே இருக்கார் சித்தாரா.

நடிகை சித்தாரா

'இதெல்லாம் சரிதான். சித்தாராவுக்குக் கல்யாணமாகிடுச்சா? உங்களுக்குனு ஒரு குடும்பம் எப்போ?'னு ஒருமுறை நிருபர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு, ''நல்ல ஆளா தேடிட்டு இருக்கேன். மாட்டினா, முதல் பத்திரிகை உங்களுக்குத்தான்''னு சொல்லியிருக்கார். ஒருகாலகட்டம் வரை, கல்யாணக் கனவுகளோடதான் சித்தாராவும் இருந்திருக்கார். காதல் தோல்வியால, லவ் பண்ணவரையே நினைச்சுக்கிட்டு வாழணும்னு சித்தாரா முடிவு பண்ணிட்டதாவும், அவரோட அப்பா இறந்ததும் வீட்டுக்கு மூத்த மகளா பொறுப்பு எடுத்துக்கிட்டதால கல்யாணத்தைத் தவிர்த்துட்டார்னும் பல வதந்திகள் சித்தாராவோட கல்யாண விஷயத்துல சுத்தி சுழன்றுக்கிட்டு இருக்கு. ஆனா, இது அத்தனையுமே சித்தாராவோட பர்சனல் விஷயங்கள்.

சித்தாரானு இல்ல, நடிகர், நடிகைகள் உட்பட யாரா இருந்தாலும், ஒரு ரசிகர், நண்பர், நலன்விரும்பினு இன்னொருத்தர் மேல நாம காட்டுற அன்பும், அக்கறையும், பர்சனல் கேள்விகளும் நமக்கான எல்லைகளை மீறாம, பிறரை சங்கடப்படுத்தாம இருக்கணும்ங்கிறதுதான் நியாயம், அறம். இதுபோன்ற எல்லை மீறிய கேள்விகளால கோபப்படாம, வருந்தி உட்காராம, ஒரு நடிகையா தன்னோட பெஸ்ட்டை கொடுத்துட்டே இருக்கிற சித்தாராவுக்குப் பூங்கொத்து வாழ்த்துகள்!

(நாயகிகள் வருவார்கள்...)

VIKATAN PLAY

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

ஜெயச்சந்திரன் : `16,000 பாடல்கள்; கேரள அரசின் 5 விருதுகள்’ - காலத்தால் அழியாத குரலுக்கு சொந்தக்காரர்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் திருச்சூர் பூங்குந்நத்து வீட்டில் வசித்துவந்தார். ஏற்கனவே அவருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்னையால் உடல்நலக்குறைவு இருந்து வந்ததால் கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்து வந... மேலும் பார்க்க

Game Changer : `எனக்கு கில்லி, தூள் படங்கள் பிடிக்கும்; அதுமாதிரி ஒரு படம்.!’ - ஷங்கர் எக்ஸ்க்ளூஸிவ்

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் சங்கரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்..`கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி தொடங்க... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 94: சாச்சனாவின் சகுனியாட்டம்; உஷாரான முத்து; `வெளில போங்க’ - பிக் பாஸ் வார்னிங்

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு எச்சரிக்கை, எவிக்ஷன் பயமுறுத்தல் என்று கலவையான எபிசோடாக இருந்தது. புதிதாக வந்தவர்கள், வந்த சூடு உடனே ஆறிப் போய் என்ன செய்வதென்று விழிக்கிறார்கள். ‘தாங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

New Year 2025: `குடியரசுத் தலைவர் முதல் சிவகார்த்திகேயன் வரை..'- பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்துகள்

உலகம் முழுவதும் 2025-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக நேற்று இரவு மக்கள் விமர்சியாக கொண்டாடினர். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமான முறைகளில் இந்த புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரவேற்கப்பட்டது. அதன்படி ... மேலும் பார்க்க

New Year Celebration 2025: மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!!! - | Photo Album

New Year Celebration 2025 at chennai MarinaNew Year Celebration 2025 at chennai MarinaNew Year Celebration 2025 at chennai MarinaNew Year Celebration 2025New Year Celebration 2025 at chennai MarinaNew... மேலும் பார்க்க