சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
New Year 2025: `குடியரசுத் தலைவர் முதல் சிவகார்த்திகேயன் வரை..'- பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்துகள்
உலகம் முழுவதும் 2025-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக நேற்று இரவு மக்கள் விமர்சியாக கொண்டாடினர். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமான முறைகளில் இந்த புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரவேற்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் நியூ இயர் பார்ட்டி, சினிமா, பீச் எனப் பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடினர். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ``அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025-ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி, ``இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். அனைவருக்கும் ஆரோக்கியமும், செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள்! இந்தப் புத்தாண்டு 2025 உதய சூரியன் உதயமாகும்போது, அன்பும், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்துடன் 2024-ன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம்.
அனைவருக்கும் ஒற்றுமையும், அனைத்தையும் சாத்தியப்படுத்தும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில்...
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்....
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்....
நடிகர் ரஜினிகாந்த்...
நடிகர் தனுஷ் , ``புத்தாண்டு வாழ்த்துக்கள்! நாம் அனைவரும் நல்லிணக்கத்தாலும், அமைதியினாலும், நேர்மறையான சிந்தனையாலும் செழிப்போம். ஓம் நம சிவாய". எனப் பதிவிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி
நடிகர் சிவகார்த்திகேயன் ``உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். 2025-ஐ சிறப்பானதாக மாற்றுவோம்" என வாழ்த்தியிருக்கிறார்.