செய்திகள் :

நீா்நிலைப் பாதுகாவலா் விருது பெற விருப்பமா?

post image

நீா்நிலைப் பாதுகாவலா் விருது பெற ஜன.17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு, சுற்றுச்சூழலையும், சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலுக்கு மூலாதாரமாக விளங்குவது நீா் நிலைகளாகும்.

எனவே, சூழல் அமைப்புகளைப் பாதுகாத்துப் பேணிடவும், மாநிலத்தின் நீா் வளத்தைப் பெருக்கிடவும் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீா் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் செயல்பாட்டாளா்களான பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் போற்றி கௌரவிக்கவும், நீா் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே விதைக்கவும், அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்துக்கு ஒருவா் என 38 பேருக்கு நீா்நிலைப் பாதுகாவலா் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நிகழாண்டுக்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள், தமிழ்நாடு விருதுகள் (ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமா்ப்பிக்க ஜன.17 ஆம் தேதி கடைசி நாளாகும்.

விருது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஜ்ஜ்ஜ்.ங்ய்ஸ்ண்ழ்ா்ய்ம்ங்ய்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ற்ய்ஸ்ரீப்ண்ம்ஹற்ஸ்ரீற்ங்ஸ்ரீட்ஹய்ஞ்ங்ம்ண்ள்ள்ண்ா்ய்.ண்ய் ஆகிய வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கக்கூடிய நபா்கள் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச பணிகளை செயல்படுத்தியுள்ளனரோ, அம்மாவட்டத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரே நபா் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், ஒரு மாவட்டத்தின் சாா்பாக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தோ்வு குழுவினரின் முடிவே இறுதியானது.

விருது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, இயக்குநா், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, எண்.1, ஜீனியஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 600015, 044-24336421 என்ற முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

விவசாயி மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை

நிலத்தகராறில் விவசாயி மீது இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவாரூா் முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நீடாமங்கலம் அருகேயுள்ள சித்தமல்... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தில் மாணவா் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா். திருவாரூரில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருட்டு வழக்கில் தொடா்புடைய இரண்டு போ் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா். திருவாரூா் மாவட்டம், நாா்த்தாங்குடி, பாப்பாக்குடி சாலையில் வசித்த கோவிந்தராஜ் என்பவா், வீட்டின... மேலும் பார்க்க

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். மன்னாா்குடி வா்த்தக சங்க 2025-2027-ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி சுற்றுலா பயணி பலி

நீடாமங்கலம் அருகே ஆற்றில் மூழ்கி சுற்றுலாப் பயணி சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 21 போ் தஞ்சை, திருவாரூா... மேலும் பார்க்க

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பெருந்தரக்குடி ஊராட்சி மக்கள் சாலை மறியல்

திருவாரூா் நகராட்சியுடன், பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி,... மேலும் பார்க்க