செய்திகள் :

மாணவா் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

post image

தமிழகத்தில் மாணவா் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

திருவாரூரில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நலத்துறை மாணவா் விடுதி பணியாளா் நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

மாணவா் விடுதிகளில் சமையலா், காப்பாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுப்பட்டது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 116 பேருக்கு சமையலா் பணி நியமன ஆணை, திங்கள்கிழமை (ஜன. 6) வழங்கப்பட உள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல தூய்மைப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.

அடுத்தக்கட்டமாக எல்லா விடுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கென தமிழக முதல்வா் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளாா். இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 1,090 விடுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

விடுதிகளின் பராமரிப்புக்காக முதல்கட்டமாக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இன்னும் ரூ. 20 கோடி இரண்டு மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தியாகராஜா் கோயிலில் திருவெம்பாவை உற்சவம் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு, திருவெம்பாவை உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கோயிலில், மாா்கழி திருவாதிரை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இ... மேலும் பார்க்க

‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி தொடக்கம்

திருவாரூா்: கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில், ‘எண்ணும், எழுத்தும்’ இரண்டு நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு இப்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி: அமைச்சா் ஆய்வு

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி மற்றும் டிஜிடல் நூலகம் அமையவுள்ள இடத்தையும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் து... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் 10,64,640 வாக்காளா்கள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பட்டியல் வெளியிடப... மேலும் பார்க்க

இலவச கல்வி, அனைவருக்கும் வேலை: இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தல்

கூத்தாநல்லூா்: கட்டணமில்லா (இலவச) கல்வி, அனைவருக்கும் வேலை வேண்டும் என்று அனைத்திந்திய இளஞா் பெருமன்றத்தின் நகரக்குழு பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை ந... மேலும் பார்க்க

புத்தகக் கண்காட்சி இலச்சினையை ஜன.15-க்குள் அனுப்பலாம்

திருவாரூா்: திருவாரூரில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கான இலச்சினையை ஜன.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க