பிக் பாஸ் 8: விதிகளை மீறியதால் 2வது நாளே வெளியேறிய ரவீந்தர்!
திருநெல்வேலி: அண்ணாநகர் பூங்காவில் நீர் தேக்கம்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்!
திருநெல்வேலி மாவட்டத்தின் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா, அப்பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இந்த பூங்காவில் மாலை நேரத்தை கழிக்கச் செல்கிறார்கள். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்த பூங்காவில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
நீர் தேக்கம் காரணமாக பூங்காவின் மொத்த அமைப்பு சீரழிந்து காணப்படுவதுடன், மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை . இதனால் அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர் தேங்கி காணப்படுவதால், பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சுகாதாரப் பிரச்னைகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீர் தேக்கம் நீண்ட நாளாக இருந்து வருவதால், அங்கு கொசுக்கள் பெருக்கம் அடைந்துள்ளன. இதனால் டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அத்துடன், தண்ணீர் தேக்கம் தொடர்ந்து துர்நாற்றத்தை வெளியிடுவதால், பூங்காவைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலையில் வீட்டின் வெளிப்புறத்திலும் கூட நேரம் செலவிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. இந்த பூங்கா, அப்பகுதி குழந்தைகளின் முக்கிய விளையாட்டு தலமாக விளங்குகிறது.
பள்ளிக்கூடங்களில் இருந்து வந்த பிறகு அங்கு அதிகமான குழந்தைகள் விளையாடி மகிழும் சூழல் நிலவுகின்றது. ஆனால் தற்போது நீர் தேக்கம் காரணமாக குழந்தைகளின் விளையாட்டு இடம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீர் தேக்கத்தை அகற்றி, பூங்கா சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும், இந்த பூங்காவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பகு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.