செய்திகள் :

ஜல்லிக்கட்டு: `காளை வளர்த்தால் உதவித்தொகை; தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ - கேட்டும் காளை வளர்ப்போர்

post image

"ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், காளை வளர்ப்போருக்கு உதவித்தொகை, வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும்" என் காளை வளர்ப்போர், வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சில தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.

உலகத்தமிழரின் பண்பாட்டுத் திருநாளான பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் முக்கியமாக மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பல ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில்தான் சில கோரிக்கைளை மாட்டு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் வைக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ``தற்போதைய தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஒரு காளைக்கு மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகையை வழங்க வேண்டும். பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் காளைகளை வளர்ப்பவர்களுக்கு அதிகம் செலவாகிறது, அதற்கு உதவித்தொகை உதவும்.

அதுபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திலேயே காயம் ஏற்பட்டால் முதலுதவி மட்டும் செய்யாமல் அதிநவீன வசதிகளுடன் மருத்துவ மையத்தை அமைத்திருக்க வேண்டும், கார், பைக் என்று பரிசு அறிவிப்பதால் வசதிபடைத்த மாட்டுக்காரர்கள் தங்கள் மாடுகளை வீரர்கள் பிடிக்காமல் இருக்க மைதானத்துக்குள் இடையூறு செய்கிறார்கள், இதை தடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டில் மாடுகள் மற்றும் வீரர்கள் பங்கேற்பதில் பாரபட்சம் பார்க்க கூடாது" என்றனர்.

ராமர் என்ற சேதுராமன்

பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர் ராமர் என்ற சேதுராமன், "நாங்கள் மூன்று தலைமுறையாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம். நான்கு நாட்டின மாடுகளை வளர்க்கிறோம். கார்த்திகை பிறந்து விட்டாலே உற்சாகமாகி விடுவோம். எங்கள் மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். தினமும் 2 கிலோ மீட்டர் நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி என அனைத்தும் வழங்குவோம். இரவு 8 மணிக்கு ஒரு கிலோ பருத்தி விதை, மக்காச்சோளம், குச்சி புண்ணாக்கு, உளுந்து அரிசியை கலந்து தீவனமாக வழங்குவோம். சக்திக்காக கூடுதலாக தினமும் பேரிச்சம்பழமும் கொடுக்கிறோம். இதனால் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு ரூ 300 வீதம் நான்கு மாடுகளுக்கும் தினசரி 1200 ரூபாய் செலவாகிறது. சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நாங்கள் சிரமத்திற்கு இடையில் நாட்டு மாட்டு இனங்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு மாடுகளை வழிவழியாக வளர்த்து வருகிறோம்.

தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் ஜல்லிக்கட்டு மாட்டிற்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கினால் உபயோகமாக இருக்கும். அது நாட்டு மாடு வளர்ப்போருக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும். மேலும் இரண்டு மாடுகள் வளர்த்து அதிக ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கு பெற வைப்போம். அதற்கு தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு மாடுகளை போட்டிக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும்" என்றார்.

முத்துலட்சுமி

அவர் மனைவி முத்துலட்சுமி பேசும்போது "தமிழகத்தின் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் எங்கள் மாடுகள் கலந்து கொண்டு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், கட்டில், பீரோ, வாஷிங் மெஷின் என ஒரு திருமணத்துக்கு தேவையான சீர் வரிசைகளை பரிசுகளாக பெற்று வந்துள்ளது. இதுவே எங்களுக்கு ரொம்ப பெருமையாக உள்ளது, அப்படியே தமிழக அரசு உதவித்தொகையையும் வழங்கினால் சிறப்பாக இருக்கும்" என்றார்.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று நம்புகிறார்கள்.!

உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று - முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

காரியாபட்டி நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவர் குடும்பத்தின் பூர்வீக நிலம் திருச்சுழி பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், இருளாயி இறந்துவிட்டதாக போலியாக சான்று பெற்று, அவர்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; தலைவர்களின் சிலைகள் மறைப்பு; மேயர் அலுவலகம் சீல்

கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரியாரின் கொள்ளுப் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா காங்கிரஸ் கட்சி சார... மேலும் பார்க்க

ஈரோடு: இபிஎஸ் உறவினருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை; பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் என். ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.ஈரோட்டைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கட்... மேலும் பார்க்க

திருநெல்வேலி: அண்ணாநகர் பூங்காவில் நீர் தேக்கம்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தின் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா, அப்பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இந்த பூங்காவில் மாலை நேரத்த... மேலும் பார்க்க

HMPV : ``யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக..." - அமைச்சர் மா.சுப்ரமணியன்

சீனாவில் பரவிவரும் Human Metapneumo வைரஸ் (HMPV) தொற்று, இந்தியாவில் ஐந்து பேருக்கு (கர்நாடகா 2, தமிழ்நாடு 2, குஜராத் 1) ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது புதிய வைரஸ் அல்ல என்றும், மக்கள் யாரும் அச்... மேலும் பார்க்க

`இனி அதிரடி' - திமுகவை போட்டுத்தாக்கும் சிபிஎம் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் - பின்னனி என்ன?

தி.மு.க-வை விமர்சிப்பதில் அ.தி.மு.க-வை விஞ்சி நிற்கிறது சி.பி.எம். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியை அக்கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் எழுப்பி கூட்டணிக்குள் வெடி வ... மேலும் பார்க்க