ஈரோடு: இபிஎஸ் உறவினருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை; பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் என். ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஈரோட்டைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கட்டுமான நிறுவனம் தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில், கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் வட மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களைப் பெரிய அளவில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்டுமான நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து, ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் ராமலிங்கத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலுள்ள அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாகச் சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான ராமலிங்கம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினராவார்.
பெங்களூர் மின் பகிர்மான திட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் நான்கு வழிச் சாலை, ஆந்திரா எல்லை சுங்கச் சாலை, பெங்களூர் நீதிமன்ற கட்டுமான வளாகம், மைசூர் அம்பேத்கர் பவன் கட்டடம், பிரம்மகிரி வீட்டுவசதி திட்டம், பெங்களூரு எலேகங்கா வணிக வளாகம், மங்களூரில் கடல்சார் கட்டுமானம் திட்டம் ஆகிய முக்கிய கட்டுமானப் பணிகளை ராமலிங்கத்தின் நிறுவனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY