ஐசிசி தரவரிசை: ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக களமிறங்கிய ஸ்காட் போலண்ட் அசத்தலாக பந்து வீசினார். 5 இன்னிங்ஸில் விராட் கோலியை 4 முறை ஆட்டமிழக்க செய்தார்.
கடைசி டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாட் கம்மின்ஸ் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தொடர் நாயகன் விருதுபெற்ற பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 908 புள்ளிகளுடன் தனது அதிகபட்ச ஐசிசி தரவரிசை புள்ளியை அடைந்துள்ளார்.
ஸ்காட் போலாண்ட் 29 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய வீரர் ஜடேஜா 9ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.
ஐசிசி பௌலர்கள் தரவரிசை
1. ஜஸ்பிரீத் பும்ரா - 908 புள்ளிகள்
2. பாட் கம்மின்ஸ் - 841 புள்ளிகள்
3. ககிசோ ரபாடா - 837 புள்ளிகள்
4. ஜோஷ் ஹேசில்வுட் - 835 புள்ளிகள்
5. மார்கோ ஜான்சென் - 785 புள்ளிகள்