Asirvad Microfinance -க்கு RBI விதித்த தடை, Manappuram Finance பங்கு விலை சரியும...
மகளிர் உரிமைத் தொகை: பொங்கலுக்காக முன்கூட்டியே வரவு வைப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
வழக்கமாக மாதம்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கலுக்காக 6 நாள்கள் முன்பே வங்கிக் கணக்குகளில் செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
ஜனவரி 10 ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவரின் கணக்குகளிலும் ரூ. 1,000 வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க : பொங்கல் தொகுப்பு விநியோகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.14 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 தமிழக அரசு வழங்கி வருகின்றது.
கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போதும் மகளிர் உரிமைத் தொகை முன்னதாகவே வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.