செய்திகள் :

தனியாளாகப் போராடியவர் பும்ரா..! முன்னாள் வீரர் புகழாரம்!

post image

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிடம் பிஜிடி தொடரில் இந்திய அணி 1-3 என மோசமாக தோல்வியுற்றது.

முதல் போட்டியிலும் மட்டுமே இந்திய அணி வென்றது. அதுவும் 295 ரன்கள் வித்தியாசத்தில் பும்ரா தலைமையில் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி போட்டியில் பும்ரா கேப்டானாக இருந்தாலும் காயம் காரணமாக அவரால் ஆடுகளத்தில் இருக்க முடியவில்லை.

இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கேப்டனாக பும்ரா குறித்து கூறியதாவது:

வழிநடத்தும் பும்ரா

பும்ராதான் அடுத்த கேப்டன். ஏனெனில் அவர்தான் அணியை முன்னின்று வழிநடத்துகிறார். பிஜிடி தொடரில் பும்ரா தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தலைமைப் பண்பிலும் அவர்மீது நேர்மறையான எண்ணத்தை பிரதிபலித்துள்ளார்.

பும்ரா மற்றவர்கள்மீது அழுத்தத்தை ஏற்படுத்துபவர் அல்ல. சில நேரங்களில் கேப்டன்கள் நம் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவர்களாக அமைந்துவிடுவார்கள். பும்ரா யாரையும் அழுத்தத்துக்கு உள்படுத்துவதில்லை. வேகப்பந்து வீச்சாளர்களிடம் நன்றாக பழகுகிறார். மிட்-ஆன், மிட்-ஆஃப் பகுதிகளில் நின்றுகொண்டு பந்துவீச்சாளர்களிடம் பேசுகிறார்.

விரைவில் அணித் தலைவர் பொறுப்பை பும்ரா ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தனியாளாகப் போராடிய பும்ரா

கம்மின்ஸ் - போலண்ட் மாதிரி ஆஸி.க்கு மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் பும்ராவுக்கு உதவ யாருமில்லை. பும்ரா இல்லாததால் ஆஸி.க்கு பேட்டிங் எளிதாக இருந்தது.

சிட்னி 4ஆவது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசியிருந்தால் சில விஷயங்கள் மாறியிருக்கலாம். தனிவீரனாக போராடினார் பும்ரா. கடைசி இன்னிங்ஸில் பும்ரா முதல் 4,5 ஓவர்கள் மட்டுமேகூட வீசியிருந்தால் போட்டி முடிந்திருக்கலாம் என்றார்.

இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதா? பும்ரா கேப்டனாக எதிர்ப்பு!

ஜஸ்பிரீத் பும்ராவை இந்திய டெஸ்ட் அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யக்கூடாதென முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வி அடைந்து அதிர்ச்ச... மேலும் பார்க்க

தொடரை வென்றது நியூசிலாந்து: ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு!

இலங்கை உடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணித் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் 16 ரன்களில் ஆட்டமிழக்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பின் மார்டின் கப்டில் கூறியதென்ன? பயிற்சியாளர் ஆகிறாரா?

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் மார்டின் கப்டில்!

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக களமிறங்கிய ஸ்காட் போலண... மேலும் பார்க்க

74 ஆண்டுகளுக்குப் பின்.. புதிய சாதனை படைப்பாரா தென்னாப்பிரிக்க கேப்டன்?

தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 74 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வ... மேலும் பார்க்க