செய்திகள் :

`ரூ.4 கோடி மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிப்பு' - 9வது நாளாக தொடரும் ஆண்டிபட்டி நெசவாளர் போராட்டம்

post image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, கோப்பயன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பங்கள் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 14 கூட்டுறவு சங்கங்கள் அமைத்து தொழில் நடந்து வந்த பகுதியில் தற்போது 4 சங்கங்கள் மட்டுமே இயங்கி வருகிறது.

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த அடிப்படையில் சேலைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் போது கூலி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூலி ஒப்பந்தம் முடிந்த பிறகும் புதிய கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வரவில்லை.

இதனால்  விசைத்தறி நெசவாளர்கள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் சோர்வடைந்துள்ளனர். இதனால் 4 கோடி ரூபாய் மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

கருப்புக் கொடி

தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நெசவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எவ்வித முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் ஐனவரி 21 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதற்கிடையே விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு; மதுரையை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் போராட்டம்!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு பேரணியாக கிளம்பி வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.திரண்ட மக்கள்மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்ட... மேலும் பார்க்க

திருச்சி: 'மாநகராட்சியோடு சேர்க்க கூடாது’ - சாலை மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள்

தமிழகத்தில் உள்ள 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசா... மேலும் பார்க்க

நொச்சிக்குப்பம்: ``கடல நம்பி வாழுற எங்கள நசுக்காதீங்க" - `நீலக்கொடி' திட்டத்தை எதிர்க்கும் மீனவர்கள்

சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள கடற்கரையில் போக்குவரத்து நெரிசலற்ற மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நீலக்கொடி கடற்கரை சுற்றுலா தளம் அமைக்க உள்ளதாக சென்னை மாநகரா... மேலும் பார்க்க

தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு... மக்கள் சொல்வதென்ன?

ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கிராமங்கள் தனித் தனி ஊராட்சிகளாகவும், ராமேஸ்வரம் பகுதி தனி நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளில் பெரும்ப... மேலும் பார்க்க