ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
குடியரசு நாளன்று கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு!
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பொன்னையா கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க | ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாமலை
அதில், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டம் நடக்கும் நேரம், இடம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
கிராம சபைக் கூட்டம் மதச்சார்புள்ள எந்த வளாகத்திலும் நடந்திடக்கூடாது.
மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் கூட்ட நிகழ்வுகளை கிராம சபை செயலி மூலம் உள்ளீடு செய்திட வேண்டும்.
மேலும் கிராம சபைக் கூட்டம் நடத்தியதற்கான அறிக்கையை அன்றைய தினமே அனுப்பிவைக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.