'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?
சின்ன திரையில் முதல்முறை... கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி!
சின்ன திரையில் முதல்முறையாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் வயதினரையும் கவரும் வகையில் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் வெள்ளித் திரை நட்சத்திரங்கள் நடிக்கும் கெட்டி மேளம் என்ற புதிய தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
கெட்டி மேளம் தொடரில் பொன்வண்ணன், சாயாசிங், பிரவீனா, சிபு சூர்யன், செளந்தர்யா ரெட்டி, விராத் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: விதிகளை மீறியதால் 2வது நாளே வெளியேறிய ரவீந்தர்!
இத்தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி சின்ன திரை ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், கெட்டி மேளம் தொடர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
பொதுவாக வாரத்தொடர்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புவது வழக்கமாக இருந்தாலும், மெகா தொடர் 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மற்ற தொடர்களைவிட அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெரும் நோக்கிலும் ரசிகர்களைக் கவரவும் இந்த புதிய முயற்சியில் தொடர் குழு இறங்கியுள்ளது.