'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?
சபரிமலையில் இதுவரை 40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
சபரிமலையில் நவம்பர் 16 முதல் தற்போது வரை 40.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக அருஷ் எஸ். நாயர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி டிசம்பர் 26-ல் மண்டல பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்றிரவு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் ஜன.14-ம தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக டிச.30 முதல் மீண்டும் நடை திறக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக சிறப்பு ஐஏஎஸ் அருண் எஸ்.நாயர் பேட்டியில்,
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. தினமும் சராசரி 90 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மகர ஜோதி தரிசனத்தின்போது பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.
நீதிமன்ற ஆணைப்படி மெய்நிகர் வரிசை, ஸ்பாட் புக்கிங் மூலம் கட்டுப்படுத்தப்படும். விளக்குப் பூஜையின்போது பக்தர்கள் வருகைக்கான ஏற்பாடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும்.
மகரவிளக்கு தரிசனத்திற்கு முந்தைய 2 நாள்களிலேயே பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். மேலும், சபரிமலையில் பாதுகாப்பான தரிசனத்தைப் பக்தர்களுக்கு உறுதிசெய்வதே நோக்கம் என்று அவர் கூறினார்.