ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
பிக் பாஸ் 8: விதிகளை மீறியதால் 2வது நாளே வெளியேறிய ரவீந்தர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நிகழ்ச்சியை சுராவசியமாக்க முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று நுழைந்த நிலையில், விதிகளை மீறியதால் மறுநாளே ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. முத்துக்குமரன், தீபக், வி.ஜே. விஷால், ரயான், அருண் பிரசாத், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி ஆகிய 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதற்காக முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர். சாச்சனா, சிவக்குமார், ரவீந்தர், ரியா, வர்ஷினி, ஆர்ணவ், சுனிதா ஆகிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைபுரிந்துள்ளனர்.
இவர்கள் வெளியுலகத் தகவல்களை வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என பிக் பாஸ் விதிகளை வகுத்தார்.
எனினும் பல இடங்களில் ரவீந்தர் சக போட்டியாளர்களுடன் அமர்ந்து வெளிஉலக தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். பிக் பாஸ் எச்சரித்தும் மறைமுகமாக இதனைச் செய்துகொண்டிருந்தார்.
வெளி உலகத் தகவல்களை போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டு பணப்பெட்டியை எடுக்க சிலருக்கு யோசனைகளைக் கொடுத்தார்.
அதோடு மட்டுமின்றி நாம் கூறும் போட்டியாளர்தான் பணப்பெட்டியை எடுக்க வேண்டும் என உள்ளே சென்ற போட்டியாளர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இவற்றின் காரணமாக ரவீந்தரை தனியாக அழைத்துப்பேசிய பிக் பாஸ், விதிகளை மீறியதாக அவரை வீட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார்?