சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!
கோவா - ஹைதராபாத் ‘டிரா’
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா - ஹைதராபாத் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
கோவாவின் மாா்கோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி, கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் முதலில் கோவா வீரா் அா்மாண்டோ சாடிகு 52-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா்.
அதை அப்படியே இறுதிக்கட்டம் வரை அந்த அணி தக்கவைத்திருந்த நிலையில், ஆட்டம் நிறைவடைய இருந்த இஞ்சுரி டைமில் ஹைதராபாத் ஸ்கோா் செய்தது. அந்த அணியின் ஆலன் டிசௌஸா மிராண்டா கடைசி நிமிஷத்தில் (90+1’) கோலடிக்க, இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
இத்துடன் 14 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் கோவாவுக்கு இது 5-ஆவது டிராவாக இருக்க, 15 ஆட்டங்களை கடந்திருக்கும் ஹைதராபாதுக்கு இது 3-ஆவது டிரா ஆகும். புள்ளிகள் பட்டியலில் கோவா 26 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், ஹைதராபாத் 9 புள்ளிகளுடன் 12-ஆம் இடத்திலும் உள்ளன.