ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
28 புறாக்களைக் கொடூரமாக கொன்ற நபரின் மீது வழக்குப் பதிவு!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட 28 புறாக்களைக் கொன்ற நபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குவாலியரின் சிந்தியா நகர் பகுதியில் காஜல் ராய் என்பவர் அவரது வீட்டின் மாடியில் 50க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வந்தார். இதனால், அவருக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மோஹித் கான் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜன.8) இரவு அவரது வீட்டின் மாடியிலிருந்து சத்தம் வந்ததைத் தொடர்ந்து அவர் மேலே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே இருந்த மோஹித் கான் காஜல் மேலே வந்ததைப் பார்த்தவுடன் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், காஜல் அவரது புறாக்களின் அருகில் சென்று பார்த்தப்போது 28 புறாக்கள் கொல்லப்பட்டு கிடக்க மீதமிருந்த புறாக்கள் பயத்தில் பதுங்கியிருந்துள்ளன.
இதையும் படிக்க:அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்
இதுகுறித்து, அவர் குவாலியர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார் பின்னர் அவர்கள் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், அங்கு விரைந்த அதிகாரிகள் கொல்லப்பட்ட புறாக்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காகக் கொண்டு சென்றனர்.
அந்த ஆய்வில் 28 புறாக்களின் கழுத்தும் திருப்பி உடைக்கப்பட்டு அவை கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர், அவர்கள் அந்த புறாக்களை குழித் தோண்டி புதைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மோஹித் கானின் மீது விலங்குகளுக்கு தீங்குவிளைவித்ததிற்காக சட்டப் பிரிவு 11 மற்றும் 325 கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய அவரைத் தேடி வருகின்றனர்.