மாடியிலிருந்து தவறி விழுந்த சமையல் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சியில் மாடியிலிருந்து தவறி விழுந்த சிவகாசியைச் சோ்ந்த சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி சீதக்காதி நடுத்தெருவைச் சோ்ந்தவா் அப்துல்ஜாபா் (27). இவா் தென்னூா், காயிதே மில்லத் நகரில் தங்கியிருந்து, பாலக்கரையில் உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தாா். ஜனவரி 1 ஆம் தேதி, வீட்டின் 2 ஆவது மாடியில் நின்று கைப்பேசியை பாா்த்துக்கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த அப்துல்ஜாபா் புதன்கிழமை (ஜன.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.