'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?
பிக் பாஸ் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார்?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் வெளியேறும் கனவுடன் இருந்த ஜெஃப்ரி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களில் இறுதிவரை சென்று வெற்றி வாய்ப்பை நழுவவிடுவதை விட பணப்பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. முத்துக்குமரன், தீபக், வி.ஜே. விஷால், ரயான், அருண் பிரசாத், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி ஆகிய 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
முன்னாள் போட்டியாளர்கள்
எஞ்சியுள்ளவர்களுக்கு போட்டியாக ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் விளையாடி வெளியேறிய பழைய போட்டியாளர்கள் 8 பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் மோத உள்ளனர். இவர்களில் இருவர் பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களில் இருவரை மாற்றம் செய்யவுள்ளனர்.
இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வார இறுதியில் பிக் பாஸ் சார்பில் பணப்பெட்டி வழங்கப்படவுள்ளது. பிக் பாஸ் போட்டியில் நீடிக்க விரும்பாத போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம்.
ரயான் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வானதால், எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுக்கவுள்ளனர்.
உள்ளே வந்த முன்னாள் போட்டியாளர்கள் கூறிய தகவல்களில் வி.ஜே. விஷால் தன் மீது நம்பிக்கை இழந்துள்ளதால், அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று அருண் பிரசாத் மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோருக்கும் வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால், பணப்பெட்டியுடன் அவர்கள் வெளியேறுவது சிறந்த ஆட்டமாக அமையும் என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் வெற்றியாளர் பெண்தான்; முத்துக்குமரன் அல்ல: ஜெஃப்ரி