மாளிகை கடை டு போதைப் பொருள் கடத்தல்; தனி சாம்ராஜ்யம் - யார் இந்த செந்தில்?
ஈரோடு கிழக்கு: அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; தலைவர்களின் சிலைகள் மறைப்பு; மேயர் அலுவலகம் சீல்
கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரியாரின் கொள்ளுப் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏ-வாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 2023 ஜனவரி 4-இல் திருமகன் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மகன் நின்ற இடத்தில் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். கிட்டத்தட்ட ஒருமாதம் நடைபெற்ற பிரசாரத்தின்போது, பரிசுப் பொருள், ஏகபோக விருந்து எனத் திக்குமுக்காடிப் போயினர் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள்.
அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியிலிருந்த காங்கிரஸ், அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் தே.மு.தி.க ஆகிய பிரதானக் கட்சிகள் களமிறங்கின. அதில், 2,27,547 வாக்குகள் பதிவான நிலையில், 1,10,156 வாக்குகள் பெற்று 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனவரி 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. ஜனவரி 18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம். பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு, பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுள்ளதை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.