செய்திகள் :

Ooty: முழுவதுமாக டீசல் இன்ஜினுக்கு மாறும் மலை ரயில்; சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் ரயில்வே நிர்வாகம்

post image

பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அடர்ந்த வனத்திற்கு ஊடாகவும் ஆறுகளுக்குக் குறுக்கேயும் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

செங்குத்து மலைச்சரிவில் சுவிட்சர்லாந்து தொழில்நுட்பமான பல் சக்கர தண்டவாள அமைப்பில் நீலகிரி மலை ரயில் பாதை நிறுவப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்து நீராவி மூலம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மலை ரயில் ஆரம்பத்தில் நிலக்கரி மூலமே இயக்கப்பட்டது.

டீசலுக்கு மாற்றப்பட்ட ரயில் இன்ஜின்
டீசலுக்கு மாற்றப்பட்ட ரயில் இன்ஜின்

நிலக்கரி தட்டுப்பாடு, மாசுபாடு குறைப்பு, தொழில்நுட்ப மாற்றம் காரணமாக ஃபர்னஸ் ஆயில் எனப்படும் தாவர எண்ணெய் மூலம் இயக்கப்பட்டது. அதிலும் காற்று மாசு என்பதால் டீசல் மூலம் இயங்கும் வகையில் அனைத்து ரயில் இன்ஜின்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி பொன்மலை பணிமனையில் வடிவமைக்கப்பட்ட '37397 ' எண் கொண்ட 'பெட்டா குயின்' ரயில் இன்ஜின் ஃபர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக அந்த இன்ஜினையும் டீசலுக்கு மாற்றி தீவிர சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறது மலை ரயில் நிர்வாகம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

'உலகின் 6 நாடுகளில் ஒன்று இந்தியா!' - பெருமை சேர்த்த தமிழர்; இனி இஸ்ரோ தலைவர்-யார் இந்த V.நாராயணன்?

உலகத்தையே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்ததில் இஸ்ரோவிற்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அந்த இஸ்ரோவையே தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் V. நாராயணன். ஆம்...தமிழ்நாட்டை சேர்ந்த V. நாரா... மேலும் பார்க்க

AI: ஏ.ஐ-யிடம் கேட்கக் கூடாத கேள்விகளும், சொல்லக்கூடாத ரகசியங்களும்... கவனம் மக்களே!

சந்தேகங்களை கூகுளில் கேட்ட காலம் போய், எதுவாக இருந்தாலும் ஏ.ஐ-யிடம் கேட்கும் காலம் வந்துவிட்டது. நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த சர்வே ஒன்றில், ஐந்தில் ஒரு அமெரிக்கர் உடல்நலம் சம்பந்தமான... மேலும் பார்க்க

``இனி போர்களில் AI'' - உக்ரைன் அதிகாரி சொல்வதென்ன?

எதிர்காலத்தில் ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர்களில் கூட செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான மிக முக்கிய கச்சா பொருள் உக்ரைனிடம் உள்ளது. உக்ரைன் - ரஷ்ய... மேலும் பார்க்க

CCTV: 'உங்கள் வீட்டிற்கு இலவச சிசிடிவி கேமரா வேண்டுமா... எங்கே, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?'

சிசிடிவி கேமராக்கள் அவசியமாகிறதுதிருட்டு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கடத்தல், விபத்துகள், கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குற்றத்தை தடுக்க, அல்லது... மேலும் பார்க்க

Chat GPT: இனி வாட்ஸ்ஆப்பிலேயே பயன்படுத்தலாம்; Meta AI உடன் போட்டிப்போடும் Open AI?

ஓபன் ஏஐ நிறுவனம் சோதனை முயற்சியாக 1-800-ChatGPT என்ற சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நீங்கள் உங்கள் மெஸ்ஸேஜிங் ஆப் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இந்த எண்ணை சேவ் செய்து சேட் ஜிடிபியுடன் உரையாடலாம்... மேலும் பார்க்க

Elon Musk: 'G - Mail' க்கு மாற்றாக 'X - Mail' - நெக்ஸ்ட் அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்

எலான் மஸ்க் எதையும் விட்டு வைப்பதாக இல்லை. எல்லாத் துறைகளிலும் கால் பதித்து தனது பிஸினஸை விரிவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பிரசாரங்கள் வரை எல்லாவ... மேலும் பார்க்க