கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
AI: ஏ.ஐ-யிடம் கேட்கக் கூடாத கேள்விகளும், சொல்லக்கூடாத ரகசியங்களும்... கவனம் மக்களே!
சந்தேகங்களை கூகுளில் கேட்ட காலம் போய், எதுவாக இருந்தாலும் ஏ.ஐ-யிடம் கேட்கும் காலம் வந்துவிட்டது. நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த சர்வே ஒன்றில், ஐந்தில் ஒரு அமெரிக்கர் உடல்நலம் சம்பந்தமான கேள்விகளை ஏ.ஐ-யை நம்பி கேட்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால், உடல்நலம் சம்பந்தமான விஷயங்களுக்கு செயற்கை நுண்ணறிவை நம்பக்கூடாது என்பது நிபுணர்களின் கருத்து.
ஏ.ஐ-யிடம் எப்படி சில கேள்விகளை கேட்கக்கூடாதோ, அதேப்போல நம்முடைய சில விஷயங்களை அவற்றுடன் நாம் கட்டாயம் பகிர்ந்துகொள்ள கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா...
1. பெயர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை ஏ.ஐ பகிரக்கூடாது. இந்த தகவல்கள் மூலம் ஒருவரின் நடவடிக்கைகளை இன்னொருவர் கண்காணிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
2. வங்கி கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண், கடவுச்சொற்கள், கடவு எண்கள் என வங்கிகள் அல்லது நிதி சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கக்கூடாது.
3. நம் ரகசியங்களை நிச்சயம் பகிரவேக்கூடாது. மனிதனைப் போல் பத்திரமாக வைத்துக் கொள்ள ஏ.ஐ-க்கு தெரியாது.
4. ஏ.ஐ மருத்துவர் அல்ல...இணையத்தில் இருக்கும் தகவல்களை சேர்த்து தருகிறது. அவ்வளவு தான். அதனால், உங்களது மருத்துவம் சம்பந்தமான தகவல்களை அதனிடம் சொல்ல வேண்டாம்.
5. ஏ.ஐ-யிடம் விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கும் லிமிட்டுகள் உண்டு. அதனால், லிமிட் அறிந்து அதை பயன்படுத்துவது நல்லது.
6. யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களை, ஏ.ஐ-யிடம் பகிராதீர்கள். ஏனென்றால், ஏ.ஐ-யிடம் பகிரும்போது அது பதிவுகளாக எங்கோ ஒரு இடத்தில் பதிவாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.