நேசிப்பாயா பாடல் உருவானது எப்படி? படக்குழு வெளியிட்ட விடியோ!
2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
புதுதில்லி: டிஜிட்டல் வாலட் நிறுவனமான, மொபிகுவிக், 2024 செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ரூ.3.59 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.
ஒன் மொபிகுவிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் அதன் ஒதுக்கீட்டு விலையுடன் ஒப்பிடும்போது ஒரு பங்குக்கு 57.7 சதவிகித பிரீமியத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு இது அதன் முதல் காலாண்டு அறிவிப்பாகும்.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 2023 செப்டம்பர் மாத இறுதியில் ரூ.207 கோடியிலிருந்து ரூ.294 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஒன் மொபிகுவிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நேற்றைய சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவினங்களும் ரூ.287 கோடியாக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வணிகத்தில் தொடர்ச்சியான முதலீடுகள் காரணமாக நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டில் ரூ.3.59 கோடி நிகர இழப்பை சந்தித்தது.
சந்தைப் பங்கை அதிகரிப்பதன் மூலமும், புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் வளர்ச்சி மற்றும் லாபத்தை சமநிலைப்படுத்துவதில் நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று ஒன் மொபிகுவிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநரான உபாசனா டாகு தெரிவித்துள்ளார்.